Wednesday, April 11, 2012

இணைய செய்தி இந்தியா...

INTERNET
ANTIVIRUS தயாரிப்பில் இருக்கும் நார்டன் நிறுவனம் சமிபத்தில் இந்தியாவில் இணைய பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது.அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டு உள்ளது.


இந்த ஆய்வு 500பேர் தேர்வுசெய்து நடத்தபட்டது.இவர்கள் 18 வயதில் இருந்து 64 வயதிற்கு உட்பட்டவர்கள்.

...ஆய்வின் முடிவுகள்...
  • இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் இணைய பயன்பாடு மேற்கொள்ள படுகின்றது.ஒரு வாரத்திற்கு 58 மணிநேரம் உள்ளது.
  • ஆய்வில் கலந்து கொண்டவர்களில் இணைய இணைப்பு இல்லாமல் முதல் முன்று மணி நேரம் ஒரு வகை மனபாதிப்பில் இருந்தவர்களாக உள்ளனர்.
  • ஒரு வாரத்தில் இணைய உலாவலில் 12.9 மணி நேரமும்,சமுதாய தளங்களில் 9.7 மணி நேரம்மும்,மெயில் பயன்படுத்துவதில் 6.1 மணி நேரம்மும் செலவழிக்கின்றனர்.
  • ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தங்களால் இணைய இணைப்பு இல்லாமல் 24 மணிநேரத்திற்கு மேல் இருக்க முடியாது என கூறியுள்ளனர்.
  • இணைய தொடர்பில் முதலில் தங்கள் அத்தியாவசிய தேவையை செய்து கொள்கின்றனர் அதனால் இணைய இணைப்பு இல்லை என்றால் தங்களின் அத்தியாவசிய தேவை பாதிக்கபடும் என்று கூறுகின்றனர்.இரண்டாவதாய் சமுதாய தளங்களை பயன்படுத்துவதும்,மூன்றாவது இணைய வழி வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துவதை கூறுகின்றனர்.
  • ஒவ்வொருவரும் வீட்டில் குறைந்தது இரண்டு சாதனங்களை இணைய இணைப்பு பயன்படுத்துகின்றனர்.தங்களின் தனிப்பட்ட தேவைக்கென வைத்துள்ள கம்ப்யூட்டர் அடுத்தவர்களை அனுமதிப்பது இல்லை.
  • 60% பேர் கம்ப்யூட்டர் அடிப்படை பாதுகாப்பினை மேற்கொண்டு உள்ளனர்.இவர்கள் பயன்படுத்தும் அண்டி வைரஸ் புதிய மால்வேர் ப்ரோக்ராம் கட்டுபடுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.
  • இணைய இணைப்பு பெறுவதில் 92% COMPUTER ,72% MOBILE,39% T.V முலமும் பெறுகின்றனர்.
SONY XPERIA S...
  SAMSUNG GALAXY NOTE:-
SAMSUNG.GALAXY,NOTE,SAMSUNG GALAXY

சென்ற மார்ச் 27 வரை SAMSUNG நிறுவனம் 50 லட்சம் GALAXY NOTE விற்பனை செய்து உள்ளனர்.இது 5 மாதத்தில் மேற்கொண்ட விற்பனை ஆகும்.இதனை முன்னிட்டு இன்னும் அதிக அளவு உற்பத்தியை மேற்கொள்ள உள்ளனர். 

2 comments:

  1. இணையத்தில் புழங்குவோர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள தகவல்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. முனைவர் பரமசிவம்

    தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete