Monday, June 18, 2012

10 வருடங்களில் கணிபொறியில் ஏற்படும் மாற்றங்கள் ...


அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.

1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.

5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.

நன்றி:-இனிமே யாருக்கும் போட மாட்டேன் இதுக்கு எல்லாம் சீனுவும் ப்ளேடும் தான் காரணம்...

ஒரு ஐந்து நிமிடம் தான் தயவுசெய்து திரட்டி ஓட்டு பட்டையில் ஓட்டு போடலாமே...
source: dinamalar.com 

images source www.google.com

34 comments:

 1. சிறப்பான தவல்களை திரட்டித் தந்துள்ளாய் நண்பா. அணைத்து தகவல்களும் அருமை. நன்றிகள் உனக்கும் தின மலருக்கும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சீனு...அடுத்த பதிவு எப்போ...

   Delete
 2. அனைத்து தகவல்களும் அருமை.. நன்றி நண்பரே !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   Delete
 3. Nice, இது நீங்கள் எழுதி தினமலரில் வெளி வந்ததா? :)

  ReplyDelete
  Replies
  1. OH MY GOD!!! என்ன வார்த்தை கேட்டுபுட்டிங்க நான் எழுதி தினமலர் வெளிவந்ததாணு தினமலர் பாத்திங்களா...சத்தியமா நான் எழுதலை...அப்புறம் ஏன்டா இந்த பில்டப்பு....சும்மா ஒரு விளம்பரம்....இனி மேல் THANKS போடவே கூடாது ரொம்ப அசிங்கபடுத்துரானுக...தேங்க்ஸ் மச்சி....

   Delete
  2. //Nice, இது நீங்கள் எழுதி தினமலரில் வெளி வந்ததா? :)//

   ஹா..ஹா..ஹா...

   Delete
  3. அண்ணா நீங்களுமா //இன்னைக்கு ரொம்ப மொக்க வாங்கிட்டோம் இன்னும் ரெண்டு நாளைக்கு தல காட்டக்கூடாது...//

   Delete
  4. //Nice, இது நீங்கள் எழுதி தினமலரில் வெளி வந்ததா? :)// ennathu appo ithu ne eluthaliya.....no never....na namba maten...... :-)

   Delete
  5. ஏய் சீனு இதுக்கு எல்லாம் நீ தான் காரணம் உன்ன..வா சென்னைக்கு வந்து பீச் போட்டே மிதிக்கிறேன்...

   யோ ப்ளேட் பீடியா எல்லாம் உன்னால வந்தது உன்ன தான்யா முதல்ல அடிக்கனும்...

   Delete
  6. அச்சச்சோ, நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? :D

   Delete
  7. ஆமாம்யா, நான் எழுதிதான் தினமலர்ல வெளிவந்துச்சுன்னு தைரியமா 'அடிச்சு' சொல்லுங்க நம்பிறுவாய்ங்க ;)

   Delete
  8. //தைரியமா 'அடிச்சு' சொல்லுங்க நம்பிறுவாய்ங்க ;)//

   neenga adichu kooda sollunga esaman namba na thayara iruken....

   unmaiya unmannum solalam neenga solra maathriyum sollalm....

   poova poonu sollalam puipam nu sollalam illa neenga solra mathiryum sollalam nu senthil eppavo solitaru boss......

   Delete
  9. //ஆமாம்யா, நான் எழுதிதான் தினமலர்ல வெளிவந்துச்சுன்னு // great timing......

   Delete
  10. :)
   //senthil eppavo solitaru boss //
   யாருப்பா அந்த செந்திலு? :)

   Delete
  11. //யாருப்பா அந்த செந்திலு?//

   அப்போ பூ புஷ்பம் புய்பம் காமெடி நீங்க பாத்ததே இல்லையா, பாஸ் காமெடி கீமடி பண்ணலியே

   Delete
 4. பதிவை விட உங்கள் நட்பு கலாய்புக்கள் சூப்பர்.. நானும் கண்டிப்பாக உங்கள் நட்பு வட்டத்துக்குள் சீக்கிரம் இணைய வேண்டும் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. அதுகென்ன பாஸ் ஹாரி னு பேரு வச்சிருக்கீங்க, சும்மா பறந்து வாங்க சேந்து கலைப்போம் கலாய்ப்போம்

   Delete
  2. @ஹாரி பாட்டர்:
   அதற்க்கு நீங்கள், நான் கேட்கும் ஒரு ராணுவ ரகசியத்தை, "இரகசியமாக" இங்கே வெளியிட வேண்டும்! ;) டீல் ஓகேவா?

   Delete
  3. ஹி ஹி .. பாவம் நம்ம சின்னமலை..

   Delete
  4. @ Karthik Somalinga
   சொல்லுங்கள் நண்பரே.. மற்ற ஒருவருக்கும் தெரியாமல் இந்த இடத்தில ரகசியமாக வெளியிடுகிறேன்..

   Delete
 5. Replies
  1. ரொம்ப நன்றி பழனிவேல்...

   Delete
 6. @ஹாரி பாட்டர்
  கண்டிப்பா மச்சி நீ எப்போதும் நம்ம நண்பன் தான் இதில் என்ன கேட்டு கொண்டு தாராளமாய் களாய்காலம் ONE REQUEST ரொம்ப மொக்க பண்ணிடதிங்க அழுதுடுவேன்...////////

  @சீனு
  அப்போ பூ புஷ்பம் புய்பம் காமெடி நீங்க பாத்ததே இல்லையா, பாஸ் காமெடி கீமடி பண்ணலியே///மச்சி எனக்கும் தெரியலை கொஞ்சம் ஞாபகம் செய்யுரியா

  @கார்த்திக்
  என்ன ரகசியம் பிளேடு

  ReplyDelete
  Replies
  1. @ஹாரி பாட்டர்:
   ப்ளாக் தொடங்கிய ஐந்தே வாரத்தில், ஐம்பதாயிரம் ஹிட்ஸ் அடிப்பது எப்படி என்ற பிரம்ம இரகசியத்தைதான் கேட்கிறேன்! :D

   Delete
  2. ஆமாம் ஹாரி எங்களுக்கும் சொல்லு ஆனால் ஹாரி போல யாரும் ஹிட் அடிக்கலை சாதனை தான் போ ஏதோ trick வச்சு இருக்கா புல்ல

   Delete
  3. @chinna malai

   ONE REQUEST ரொம்ப மொக்க பண்ணிடதிங்க அழுதுடுவேன்...////////

   சின்ன மலை நீ ரொம்ப நல்லவன்பா.. ஹி .. ஹி ..

   Delete
  4. நன்றி நண்பர்களே.. ப்ளாக்கிற்கு வந்து இன்று தான் அதிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.. என்னையும் ஏற்று கொண்டு விட்டார்கள் என்று.. THANKS MY DEAR FRIENDS..

   Delete
 7. அனைத்து தகவல்களும் அருமை..

  ReplyDelete
 8. நன்றி நண்பா...

  ReplyDelete
 9. நண்பரே! அருமையான கணிப்பு!!!!!!!

  ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் இடம் காலியாக உள்ளது, நீங்கள் செல்கிறீர்களா???

  ஆப்பிள் நிறுவனம் தங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறது........

  ReplyDelete
 10. நானும் அதை பத்தி தான் யோசிக்கிறேன் நண்பா அப்புறம் ஸ்டீவ் எல்லோரும் மறந்துவிடுவாங்க அதான் பார்கிறேன்(உனக்கு மனசுக்குள்ள இந்த நினைப்பும் இருக்கா)

  நண்பா இது என்னுடையது இல்லை தினமலர் வந்தது நன்றி சொல்லி தினமலர் தான் போட்டு இருந்தேன் மேல பிலேடு,சீனு,ஹாரி மூணு பேரும் பண்ணிய வேலையால நன்றி சொன்னதையே எடுத்து புட்டேன்...

  ReplyDelete
 11. உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete