Sunday, June 24, 2012

எதிர்காலத்தில் FACEBOOK நிலை என்ன ஆகும் ஒரு அலசல் ...

இது என்னுடைய அலசல் கிடையாது(அதானே பார்த்தேன் இந்த அளவுக்கு உனக்கு அறிவு எங்க இருந்து வந்துச்சுன்னு பார்த்தேன்)விகடன் ஒரு அலசு அலசி இருந்தாங்க அந்த அலசல் நல்லா இருந்துச்சி அதனால அந்த அலசலை அப்படியே தூக்கி இங்கே அலசி உள்ளேன்...


ஆரம்பம்

பேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் ஜூக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.


நிறுவனத்தின் வருமானம்

முகநூல் நிறுவனம் 3200 மேலான ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம் இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.500 மில்லியன் டாலர் இது 2009 ஆண்டின் நிலவரம் இப்ப என்னவென்று நான் தேட வில்லை யாரவது இப்ப FACEBOOK வருமானம் என்ன என்பதை கூறவும்...(கிடைத்தது போதும் என விட்டு விட்டேன்)

இப்படி சக்க போடு போட்ட பவர்ஸ்டார்ரோட லத்திகா படம் போல இருந்ததை ஒரு பையா இனி மேல் FACEBOOK ஊதிக்கும் என சொல்லிபுட்டார் மார்க் ஜூக்கர்பர்க் வயித்தில் ஒரு டன் புளியை கொட்டி கரைத்த மாதிரி இருக்குது....இதுக்கு கிழ விகடன் சொன்னதை படித்துகொள்ளுங்கள்...


'மெல்ல தமிழ் இனி சாகும்' என பாரதியை ஆங்கிலேய பெண்மணி ஒருவர் பதற வைத்தது போல மெல்ல இனி பேஸ்புக் மறைந்து போகும் என ஒருவர் ஆருடம் சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

அயன்பயர் கேபிடல் என்னும் முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனரான எரிக் ஜாக்சன் என்பவர் தான் இப்படி குண்டை(நல்லா வெடித்து உள்ளது) தூக்கி வீசியிருக்கிறார். பேஸ்புக் இன்று வேண்டுமானால் பிரப‌லமாக இருக்கலாம் ஆனால் இன்னும் 5 அல்லது 8 ஆண்டுகளில் பேஸ்புக் காணாமல் போய்விடும் என்று அவர் கூறியுள்ளார்.


இதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் இணையத்தின் வாயில் என்று வர்ணிக்கப்பட்டு இன்று பின்னுக்கு தள்ளப்பட்ட வலைவாசல் யாஹூவை அவர் உதாரணமாக காட்டிருக்கிறார். யாஹு இன்னமும் லாபம் ஈட்டுகிறது, அதில் 13000 பேர் பணியாற்றுகின்றனர். ஆனால் அதன் மதிப்பு பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததில் இருந்து வெறும் 10 சதவீதமாக சரிந்து விட்டது என்பதை சுட்டிக்காட்டும் ஜாக்சன், பேஸ்புக் விஷயத்திலும் இது தான் நடக்கும் என்கிறார்.

பேஸ்புக்கிற்கு எதிராக அவர் சொல்லும் மற்றொரு காரணம் இணைய உலகமே செல்போனை நோக்கி நகர்வது தான். யாஹு போன்ற வலைவாசல்கள் முதல் தலைமுறை நிறுவனங்கள் என்றால், பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இரண்டாவது தலைமுறை நிறுவன‌ங்கள். ஆனால், செல்போன் சார்ந்த நிறுவனங்களே மூன்றாவது தலைமுறையில் ஆதிக்கம் செலுத்தப்போவதாக கூறும் ஜாக்சன் அப்போது பேஸ்புக் செல்வாக்கு இழந்து நிற்கும் என்கிறார்.

ஜாக்சன் வெறும் முதலீட்டாளர் தான். இணைய நிபுணரோ மேதையோ அல்ல என்றாலும் அவரது ஆருடம் இணைய உலகில் கிலியை ஏற்படுத்தியிருக்கிற‌து.

அதற்கு முக்கிய காரணம் பேஸ்புக் பங்குசந்தையில் நுழைந்திருக்கும் நேரத்தில் இந்த கணிப்பு வெளியாகியிருப்பது தான். அது மட்டும் அல்ல, பெரும் எதிர்பார்ப்புடன் பங்கு சந்தையில் பேஸ்புக் அறிமுகமானாலும் அதன் பங்குகள் எதிர்பார்த்த வேகத்தில் ஏறுமுகம் காணாமல் முதல் நாளில் இருந்தே தடுமாறிக்கொண்டிருப்பது பல்வேறு கோணங்களில் அலசப்பட்டு வரும் நேரத்தில் இந்த கணிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பேஸ்புக் பங்குசந்தையில் நுழைந்த வேகம் தான் என்ன?அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என்ன?

சமூக வலைப்பின்னல் தளங்கள் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கும் பேஸ்புக் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்படும் தளங்களின் பட்டியலில் எப்போதுமே முன்னணியில் இருந்தது. அதோடு எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக் என பேசிக்கொண்டிருந்ததால் அதன் சந்தை மதிப்பும் பில்லியன் கணக்கில் பேசப்பட்டு வந்தது.

அதனால் தான் பேஸ்புக் பங்கு சந்தைக்கு வந்த போது அது கோடீஸ்வரர்களை உருவாக்கப்போவதாக பேசப்பட்டது. பேஸ்புக்கின் நிறுவனரான ஜக்கர்பெர்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.

இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் பேஸ்புக் பங்குசந்தையில் நுழைவதற்கு சில நாட்கள் முன் 'இன்ஸ்டாகிராம்' என்னும் செல்போன் செயலியை 100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. பேஸ்புக்கின் விரிவாக்க உத்தியாக இது பாராட்டப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பிற்கும் பரப‌ரப்பிற்கும் பேஸ்புக்கின் பங்குகள் எங்கோ போயிருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் விற்பனையிலேயே பேஸ்புக் பங்குகள் ஏமாற்றம் அளித்தன. தொடர்ந்து பேஸ்புக் பங்குகள் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக் இப்படி ஏமாற்ற என்ன காரணம்?அதன் செல்வாக்கு பற்றிய பேச்செல்லாம் வெறும் மிகைப்படுத்தல் தானா? என்றெல்லாம் இணைய உலகில் அலசி ஆராயப்படலாயிற்று. பேஸ்புக்கின் பிரச்னை ஒரு புறம் இருக்க, அந்நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது பங்கு சந்தை கனவில் இருக்கும் மற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவன‌ங்களை எப்படி பாதிக்கும் என்றும் கவலையோடு விவாதிக்கப்பட்டது.

இந்த நேரம் பார்த்து தான் ஜாக்சன் பேஸ்புக் காணாமல் போகும் என்று கூறியிருக்கிறார். இந்த கருத்தை மறுப்பதற்கு கூட யாரும் துணியவில்லை.

அது மட்டும் அல்ல ஒரு காலத்தில் முன்னணியில் இருந்து பின்னர் பின்னுக்கு தள்ளப்பட்ட மைஸ்பேஸ் (Myspace) கதி பேஸ்புக்கிற்கு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மைஸ்பேஸ் ஒருவிதத்தில் பேஸ்புக்கிற்கு முன்னோடி. எல்லோரும் மைஸ்பேஸ் பற்றி  பேசிக்கொண்டிருந்த காலமும் உண்டு. ஆனால் மைஸ்பேஸ் பேஸ்புக்கின் எழுச்சியால் ஓரங்கப்பட்டு விட்டது.

ஜாக்சன் சொல்வது அப்படியே நட‌க்குமா என்று தெரியவில்லை. ஆனால் பேஸ்புக் சவாலான நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதன் முக்கிய பிரச்னை செல்வாக்கு அல்ல. செல்வாக்கிற்கு நிகரான வருவாயை ஈட்டுவது. ஆனால் இன்று வரை பேஸ்புக் வருவாய்க்கான உறுதியான வழியை கண்டு பிடித்தபாடில்லை. கூகுல் போல விளம்பரம் மூலம் வருவாயை கொட்ட செய்வதற்கான வழி அதனிடம் இல்லை.

அதோடு நாளுக்கு நாள் செல்போன் வழியே பேஸ்புக்கை அணுகுபவர்கள் அதிகரித்து வருவதும் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. காரணம் இணையம் சார்ந்த வருவாய் வழியை கண்டுபிடித்தாலும் பெரும்பாலான பயனாளிகள் செல்போனுக்கு சென்று விட்டால் பேஸ்புக்கிறகு அது சோதனையாகவே முடியும் என்பது தான். இந்த‌ இடத்தில் டிவிட்டர் தொடர்பான ஒரு தகவலை கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும். பேஸ்புக் போலவே சமுக வகைப்பபின்னல் சேவையான டிவிட்டர் செல்போன் சேவை மூலம் கணிசமான வருவாயை பெருவதாக சமீபத்தில் அறிவித்தது. ஆக, டிவிட்டர் எதிர்காலத்திற்கு தயாராகி விட்டது. பேஸ்புக் இப்போது தான் வருவாய்க்கான வழியை தீவிரமாக தேடத்துவங்கியுள்ளது.

இணைய உலகை பொருத்தவரை எந்த நிறுவனமும் முன்னணி நிறுவனமாக உருவாவது சாத்தியம் தான். புதுமையான கருத்தாக்கம் இருந்தால் இணையவாசிகளை கவர்ந்து விடலாம். அதன் மூலம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுவிடலாம்.
ஆனால் எல்லா முன்னணி நிறுவனங்களுமே லாபம் ஈட்டும் வழியில் முன்னேறுவதில்லை. இ-காமர்ஸ் முன்னோடியான அமேசானில் துவங்கி எண்ணற்ற நிறுவனங்கள் வரை இந்த சாபக்கேட்டில் இருந்து தப்பியதில்லை. இப்போது பேஸ்புக்கும் இதில் சிக்கியிருக்கிற‌து.

எனவே பேஸ்புக் லாபம் ஈட்டும் வழியை கண்டு பிடிப்பது மட்டுமே அதன் வெற்றிக்கான வழியாக சொல்லப்படுகிற‌து. பேஸ்புக்கிற்கு கோடிக்கணக்கில் பயனாளிகள் இருக்கலாம், வருவாயும் கோடிக்கணக்கில் இருப்பதற்கான வழியை அது தேடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

உலகின் இளம் கோடீஸ்வராரான அதன் நிறுவனர் ஜக்கர்பெர்க் இதற்கான வழியை கண்டுபிடிப்பதில் தான் பேஸ்புக்கின் எதிர்காலம் உள்ளது.

கண்டிப்பா ஜுக்கர் விழித்து இருப்பார் (அப்ப இவ்வளவு நேரம் தூங்கிகிட்டா இருந்தார்) FACEBOOK இல்லன்னா நாம சோறு தீங்க முடியாது இனி விட கூடாது என பல முயற்சி செய்தாவது FACEBOOK காப்பாற்ற ஏதாவது செய்வார்...மொபைல் தான் பலரும் பயன்படுத்துகின்றனர் அதனால் விளம்பரங்கள் மொபைல் தெரியவைபது கடினம் இதை சரி செய்தால் facebook வெற்றி அடையலாம்...இந்த நேரத்தில் வேற பங்குசந்தை விழ்ச்சி இதை ஒரு அளவிற்கு உண்மை ஆக்கிவிட்டது...ஏதாவது செய்து விழிச்சுக்கோ SUNRISE குடிச்சுக்கோ நான் FACEBOOK பயன்படுத்தி ஒரு வருடத்திற்கும் மேல ஆகுது இப்பவெல்லாம் TWITTER தான் நம்ம CHOICE....சும்மா இருந்த பவர்ஸ்டார் எவனோ உசுப்பிவிட்டு நடிக்க வைத்ததை போல FACEBOOK பங்குசந்தையில் படாத பாடு படுது....

10 comments:

 1. பேஸ்புக் தற்போது பங்குசந்தையில் முன்னேறி வருகிறது. ஆனாலும் தொடக்க விலையை இன்னும் எட்டவில்லை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

  ReplyDelete
  Replies
  1. சந்தையில் பங்கின் மதிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது, Mark Zuckerberg-இன் முன்னாள் நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்!

   Delete
  2. :) :) :)

   நான் கூட பேஸ்புக் பங்குகள் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். பணம் இல்லாததால் வாங்கவில்லை.

   :) :) :)

   Delete
  3. கொஞ்சம் லேட் ஆச்சு reply கொடுக்க....
   @Abdul Basith
   பங்குசந்தையில் முன்னேறுவது நல்ல விஷயம் தான் ஆனா எப்போ என்ன ஆகும்னு தெரியாது... பேஸ்புக் பங்குகள் வாங்குனா சொல்லுங்க

   @Karthik Somalinga
   அப்போ நீங்க தான் ஜூக்கர்பேர்க் நண்பர் போல

   Delete
 2. Replies
  1. நன்றி நண்பா.....

   Delete
 3. Replies
  1. நன்றி தனபாலன் சார்....

   Delete
 4. எது எப்படியோ இன்று முகப் புத்தகம் சென்றால் நாளை வேறு ஒரு புத்தகம் வரப் போகிறது. நம் கடன் சாட் செய்து கிடப்பதே....

  ReplyDelete
  Replies
  1. முகபுத்தகம் போய் விட்டால் கால்,கை,நெஞ்சு புத்தகம் என ஏதாவது ஒரு வரும் ஆனா இனி எவனும் வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் என எந்த புத்தகத்தையும் சொல்ல மாட்டான் இனி எல்லாம் கம்ப்யூட்டர் உலகம் கணினி தான் உலகத்தை ஆளும்...இதில் சந்தேகம் இல்லை...

   Delete