Monday, October 17, 2016

கூகிள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸ்எல் GOOGLE PIXEL AND PIXEL XL

கூகிள்,கூகிள் பிக்ஸல்,கூகிள் பிக்ஸல் எக்ஸ்எல்,GOOGLE PIXEL,GOOGLE PIXEL XL
இதுவரை கூகிள் மற்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களோடு இணைந்து நெக்சஸ்(NEXUS) என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தயாரித்து வந்தது.அந்த வரிசையில் LG மற்றும் ஹுவாவேய் உடன் இணைந்து நெக்சஸ் 5X மற்றும் நெக்சஸ் 6P என இரண்டு ஸ்மார்ட்போன் சென்ற வருடம் வெளியிட்டது.அதில் 6P பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.நெக்சஸ் வரிசையிலேயே சிறந்த தொலைபேசியாக 6P இருந்ததது.

இந்நிலையில் HTC உடன் சேர்ந்து புதிய நெக்சஸ் ஸ்மார்ட்போன் வெளியிட போவதாக தகவல்கள் வந்ததன.நெக்சஸ் வரிசையை கைவிட்டுவிட்டு அதற்கு மாற்றாக ஆச்சர்யபடுத்தும் விதமாக கூகிள் தனது முதல் சொந்த ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது.தனது முதல் ஹார்ட்வேர் கொண்ட மொபைல் போன்.இதை (KING OF ANDROID)ஆன்ட்ராய்ட் மொபைல்களின் அரசன் என்றே சொல்லலாம்.

கூகிள் பிக்ஸல்,கூகிள் பிக்ஸல் எக்ஸ்எல்,GOOGLE PIXEL XL,GOOGLE PIXEL

இரண்டு தொலைபேசியை கூகிள் வெளியிட்டுள்ளது.பிக்ஸல்(PIXEL) மற்றும் பிக்ஸல் எக்ஸ்எல்(PIXEL XL).இவை இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.இவற்றின் டிஸ்ப்ளே(DISPLAY) மற்றும் பேட்டரி(BATTERY) மட்டும்மே வித்தியாசங்கள் கொண்டவை.

PIXEL 5 inch Display 2270 mah Battery, PIXEL XL 5.5 inch Display 3450 mah Battery கொண்டவை ஆகும்.மற்றபடி 4 GB RAM,12.3 MP Rear camera,Snapdragon 821,8 MP Front camera.லேட்டஸ்ட் OS 7.1,பிங்கர் பிரிண்ட் சென்சார்.

32 GB மற்றும் 128 GB என  இரண்டு வகையில் கிடைக்கிறது.மெமரி கார்ட் போட முடியாது.

PIXEL,PIXEL XL,பிக்ஸல்,பிக்ஸல் எக்ஸ்எல்,கூகிள்
இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் இதில் வாட்டர் ப்ரூப் கிடையாது.இரண்டு வருடங்களுக்கு OS UPDATE கண்டிப்பாக கிடைக்கும்.அதன் பிறகு கிடைக்கலாம்.மூன்று வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் தருகிறார்கள்.

இதை கண்டிப்பாக வாங்க மற்றொரு காரணம் வாழ்நாள் முழுக்க UNLIMITED PHOTOS(போட்டோ) மற்றும் VIDEO(*வீடியோ) இலவசமாய் வைத்துகொள்ளும் வசதியை கூகிள் தருகிறார்கள்.கூகிள் அல்லோ-வில் கூகிள் ஆசிஸ்டன்ட் (GOOGLE ASSISTANT) பிரபலமாக உள்ளது அதை கொண்ட முதல் தொலைபேசியாக பிக்ஸல் வருகிறது.கூகிள் நவ்(GOOGLE NOW) மாற்றாக இருக்கலாம்.

DxOMARK இது ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் கேமரா லென்ஸ் சோதித்து ரேட்டிங் கொடுக்கும் பெரிய நிறுவனம் ஆகும்.இவர்கள் கூகிள் பிக்ஸல் கேமராவிற்க்கு கொடுத்து இருக்கும் மதிப்பு 89 ஆகும்.இதுவரை இவர்கள் ஒரு ஸ்மார்ட்போன் கேமரா கொடுத்த அதிகமான ஸ்கோர் இதுதான்.பிக்ஸல் கேமரா தரம் மிகவும் அற்புதமாய் உள்ளது.DSLR இணையான தரத்தினை பிக்ஸல் கொண்டுள்ளது.தற்போது பிளிப்கார்ட் ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.உங்களின் பழைய மொபைல் எக்ஸ்-சேன்ஞ் செய்து கொள்ளலாம்.அக்டோபர் 25 தேதியில் இருந்து டெலிவரி செய்யப்படும்.இதன் ஆரம்ப விலை 57,000 ரூபாய் ஆகும்.

மேலும் இதன் தொழில்நுட்ப விவரங்களை அறிந்துகொள்ள விருப்பம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்.

2 comments:

  1. அப்துல் பாஸித்October 17, 2016 at 2:23 PM

    தகவலுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றியா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை.

      Delete