Monday, December 2, 2019

எனை நோக்கி பாயும் தோட்டா

Enai Nokki  Paayum Thotta 

ஒரே கதை

இரெண்டு வெர்ஷன்கள்..ஒன்றை சிம்புவை வைத்து "அச்சம் என்பது மடமையடா!!" எடுத்தார். அதே சமயத்தில் இன்னொரு வெர்ஷனை தனுஷை வைத்து "எனை நோக்கி பாயும் தோட்டா" என எடுத்திருக்கிறார். இரெண்டு நடிகர்களை வைத்து ஒரே கதையின் இரெண்டு வெர்ஷன்களையும் ஒரே நேரத்தில் எடுத்திருப்பது நிஜமாகவே பாரட்டுதலுக்குறியது. ஆனால் அதை ப்ரெசெண்ட் செய்த விதத்தில் தடுமாறிவிட்டார். ‌
கெளதம் படத்தில் என்னவெல்லாம் எதிர்ப்பார்த்து வருவோமோ அதெல்லாமே இருக்கிறது. என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கமாட்டோமோ அதுவும் இருக்கிறது.

ஒரு கதையை சொல்லும்போது காலத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் காட்சிகளின் மூலம் நகர்த்தி ட்விஸ்ட் வைத்து எங்கேஜ் செய்யும் உத்தியை இவரளவிற்கு யாரும் அழகாக கையாள்வதில்லை. இந்த கதையில் அதுவே அலுப்பு தட்டுகிறது. 

காரணம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகரும்போது திரைக்கதையில் அழுத்தமின்மை. மேலும் அச்சம் என்பது மடமையடாவை மறக்காமல் நியாபகப்படுத்துவது..(துருக்கியில் ஒரே தேதியில் இரெண்டு படங்களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக ஷூட் நடத்தி இருக்கிறார்) 

சசிகுமாரை இங்கிலீஷ் பேசவைத்திருக்கிறார். வேல ராமமூர்த்தி ஐயாவிற்கு டீஷர்ட் ஜீன்ஸ் மாட்டி அழகு பார்த்திருக்கிறார். 

இதைத்தவிர படத்தில் என்ன புதுமை என்றால் தனுஷ்... ஒரு ஸ்டைலீஷான லுக்கில் இங்கிலீஷ் பேசிக்கொண்டு காதலுடன் பின்னந்ததலையை தடவிக்கொண்டு குனிந்து அழகாய் சிரித்து பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதன் பிறகு மேகா ஆகாஷ். செம்ம அழகு...க்யூட்... பார்த்தவுடனேயே உள்ளே பற்றிக்கொள்ளும் அழகு...அவருக்கு இது தான் முதல் படம்..இது ரிலீஸாவதற்குள் அவர் நான்கைந்து படம் செய்துவிட்டார். 

காதல் காட்சிகள், கவிதையான வசனங்கள், சின்ன சின்ன லுக்ஸ் அதன் பின்னனியில் மனதோடு பேசுவது போல வாய்ஸ் ஓவரில் கெளதம் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். ஆனால் அந்த காதலுக்கு அழுத்தமான ஒரு ஆக்‌ஷன் பேக்ட்ராப்பை கொடுக்க சென்று மொத்தமாக கவிழ்த்துவிட்டார். 

அவரது ஆக்‌ஷன் கதைகளில் பலமான வில்லன் ரோல்கள் தான் திரைக்கதையின் பலம்.. ஆனால் இந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு பல வண்ணங்கள் அடித்திருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் கவனித்தேன். 

முதலில் ஹீரோயினின் கார்டியன் என்கிறார்.. பிறகு டைரக்டர் என்கிறார்.. அதன் பிறகு டைரக்டர் கம் புரோடியூஷர் என்கிறார். சாடிஸ்ட் என்கிறார்...சைக்கோ என்கிறார்.. வுமனைசர் என்கிறார்..இடைவேளைக்கு மேலே அவர் தாதா என்கிறார்.. அதன் பிறகு வெப்பென் சப்ளையர் என முடிக்கிறார். படிப்படியாக அந்த கேரக்டரை எஷ்டாப்ளைஸ் செய்து ஆச்சர்யங்கள் கூட்ட நினைத்திருக்கிறார். அதற்காக அவர் ஒரு புதுமுகத்தை இறக்கி இருப்பதும் நன்றாக தான் இருந்தது. ஆனால் படம் பல லேயர்களில் முன்னோக்கி பின்னோக்கி செல்வதாலும் சசி உள்ளே வந்ததால் அவருக்கு ஸ்கோப் கொடுக்க சில காட்சிகள் எழுதி எதை எங்கே வைத்து எதை எங்கே கோக்க என தடுமாறி  நம்மை பாடாவதியாக்கிவிட்டார். 

படத்தில் ப்ளஸ் பாடல்கள் & மேகா ஆகாஷ் மட்டும் தான்..ஆமாம் அவை மட்டுமே தான். 

இடைவேளை வரை அவரது ட்ரேட்மார்க் ஏரியாவான அழகான காதல் காட்சிகளால் முன்னும் பின்னுமாக நகர்ந்து அட்டகாசமாக செல்கிறது..இரெண்டாவது பகுதியில்  தான் நம்மை கதறவைக்கிறார். 

ஒரு தீவிர கெளதம் ரசிகனாக நான் இருந்தாலும் அவரது அடுத்தபடம் "இமைப்போல் காக்க"வை நான் பார்க்க பயப்படுகிறேன் என்றே தான் சொல்ல வேண்டும். படத்தில் குட்டி குட்டியாக நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது.. காட்சிகள் இருக்கிறது. அவற்றை தனித்தனியாக எழுதுகிறேன்.. 

Credits: https://www.facebook.com/sampathkumar.ganesh 

2 comments: