Thursday, May 17, 2012

NINJA ASSASSIN விமர்சனம்...

DIRECTOR:- JAMES McTEIGUE
PRODUCER:- JOEL SILVER,THOMAS TULL
DISTRIBUTOR:-  WARNER BROS
WRITERS:- MATTHEW SAND,J.MICHAEL STRACZYNSKI
COMPOSER:- ILAN ESHKERI
ACTORS:- RAIN,RICK  YUNE,NAOMIE HARRIS,STEPHEN MARCUS
BUDGET:- $40 MILLION
COLLECTION:- $61 MILLION
IMDB RATING:- 6.3/10
MPAA RATING:- R
GENRE:- ACTION,THIRLLER
RELEASE:- NOVEMBER 25 2009(INDIA 27 NOVEMBER 2009)
RUN TIME:- 1 HOUR 39 MIN

இந்த தளத்தை ஆரம்பிக்கும் போது நானும் திரைப்படங்களை பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்தேன் ஆனால் எழுத முடியவில்லை என்னென்றால் எழுத தெரியவில்லை இப்ப மட்டும் எழுத தெரியுமா இப்பவும் இல்லை எழுதணும் என்கிற ஆர்வத்தில் தான் எழுத உள்ளேன்.இதில் ஏதேனும் தவறு இருக்கும் இருந்தால் மன்னிக்கவும்.
பேன்ட் கிழிந்தது கூட தெரியாமல் போஸ் கொடுக்கிறார்.

படத்தின் கதை என்னன்னா நம்ம ஹீரோவோட லவ்வர் கொன்ன கூட்டத்தை பழி வாங்குவது தான் கதையே.நம்ம ஊர் படங்களில் உள்ள கதை தான் இருந்தாலும் நிஞ்சா என்னும் கூட்டத்தை காட்டி படு பயங்கரமான சண்டைகள் எல்லாம் வைத்து உள்ளார்கள்.

சொல்லும் அளவிற்கு படம் இல்லை என்றாலும் ஏதோ சரி எனலாம்.அப்பறம் என்டா எழுதற ரொம்ப நாள்(ஒரு வருஷம்) பார்க்க நினைத்து பார்க்க முடியலை அதான் இப்ப பார்த்து விட்டேன் எழுதறேன்(இப்படி ஏல்லாம் கொடுமை படுதுரானே)
ஹீரோவுக்கு உதவி செய்யும் அம்மணி

இரண்டு போலீஸ் ஆபீசர் அந்த நகரத்தில் நடக்கும் கொலைகளை விசாரணை செய்கின்றனர் அந்த கொலை செய்வது நின்ஜாகள் என தெரியவருகிறது.அந்த நின்ஜாகள் ஐம்பது கிலோ தங்கம் அல்லது அதற்கு நிகரான பணம் தருபவர்களுக்கு கொலை செய்கின்றனர் அவர்களுக்கு பெரிய அரசியல்வாதிகள் துணையாய் இருக்கின்றனர்.

நம்ம வில்லன் இவர் தான்
ஹீரோவும் அவர் லவ்வர்ரும்
அதனால் நின்ஜாவை பற்றி விசாரணை செய்யும் இருவரையும் விசாரிக்க தடை செய்கின்றனர்.அவர்களை கொலை செய்ய நின்ஜாவை அனுப்புகின்றனர் .
இந்த நிஞ்சாகள் கொலை செய்யும் முன் அவர்களுக்கு கருப்பு மணல் அனுப்புவார்கள் அதற்கு அப்புறம் அவர்கள் குளோஸ்.அதைப்போல நம்ம போலீஸ் ஆபீசர் (மிகா)வுக்கு அனுப்புகின்றனர் ஆனால் நம்ம ஹீரோ ரெய்சோன் காப்பாற்றி விடுகிறார் அப்பதான் ஹீரோ கதை சொல்லறார் தான் சிறுவனாய் இருக்கும் போது அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிறு வயதில் இருந்து துணையாய் ஒரு பெண் உள்ளார்.

அவர் ஒரு முறை தப்பித்து செல்லும் ஹீரோவோட காதலியை பிடித்து கொன்று விடுகின்றனர் இதனால் அந்த கூட்டத்தை பழி வாங்க நினைகிறார்.அதற்கு அந்த மிகா உதவி செய்கிறார்.கடைசியில் அந்த கூட்டத்தை அளித்தார என்பது தான் கதை.

ஹீரோவுக்கும் நிஞ்சாவிற்கும் சண்டை வரும் பாருங்க உடம்பில் எவ்வளவு ரத்தம் இருக்கும் என்று தெரியலை ஹீரோ ரத்தம் வர சண்டை போடுவார்.ஹீரோ தன்னுடைய பயிற்சிகாக ஒரு குண்டனை கொலை செய்யும் காட்சி நல்லா இருக்கும் அதோடு சிரிப்பாய் இருக்கும்.

ஹீரோ வில்லனுக்கு மூக்கில் ஒரு பஞ்ச் கொடுத்துவிட்டு பலத்த காயத்துடன் எஸ்கேப் ஆகிறார் அவர்களும் ஹீரோவை கொள்ள தேடுகின்றனர்.அவர்கள் கொலை செய்யும் ஆட்களை எல்லாம் ஹீரோ காப்பாற்ற செல்கிறார்.

TRAILER

No comments:

Post a Comment