Thursday, June 21, 2012

MISSION IMPOSSIBLE PART1 விமர்சனம்...

MISSION IMPOSSIBLE பிடிக்காது என யாரவது சொல்லுவாங்களா.(நான் சொல்லுவேன் அப்படின்னு பிடியா ஏதாவது சொல்லும்)இந்த படம் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரெண்டு இருக்கு ஒன்னு படத்தின் டைட்டில் MISSION IMPOSSIBLE ரெண்டாவது நம்ம BEAUTIFUL HERO TOM CRUSIE இப்போ வயசு ஆச்சு வயசு ஆனாலும் இன்னும் இளமையாய் கமல் மாதிரி இருக்கார்
.இந்த இரண்டும் தாங்க படத்தின் முதுகு எலும்பு(ஏன் காலு,மூளை சொல்லகூடதா) இதில் ஏதாவது ஒன்னு இல்லை என்றாலும் படம் கண்டிப்பா ஊத்திக்கும்.நான்கு பாகத்திலும் ஒரே மாதிரி தான் ஹாக்கிங்,பாம்,அணு ஆயுதம் கடைசியாய் ஈதன் மட்டும் மாட்டிகுவார் கடைசியாய் தன் மேல் எந்த குற்றம் கிடையாது நம்ம தமிழ் படம் போன்ற கதை.ஒரே கதையாய் இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்தபடும் டெக்னாலஜி தான் பார்க்க தூண்டும்...சரி படத்தின் கதைக்கு வருவோம்....

SECRET AGENT பெயர் இருக்ககூடிய LIST திவரவாதிங்க திருட முயற்சி செய்யறாங்க அப்படி திருடும் போது ஆதாரதொடு அவர்களை பிடிக்க சொல்லி ஆர்டர் போடறாங்க அதற்காக மிஸ்டர் பெல்ப்ஸ் தலைமையில் ஆறு பேர் கொண்ட டீம் போறாங்க அப்படி போகும் போது டாம் குருஸ் தவிர எல்லோரும் கொலை செய்ய படுறாங்க இந்த பழி ஈதன் மேல விழுது அதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது தான் கதை...

தன்னுடைய டீம் இருந்த எல்லோரும் இறந்து விட்டதை தன்னுடைய உயர் அதிகாரி கிட் ரிச் கிட்ட நடந்ததை சொல்லும் போது இந்த ஆபரேஷன் சும்மா நாங்களா setup செய்தது எதுக்குன்னா IMF ரொம்ப வருசமா இருந்த ஒரு குறையை கண்டுபிடிசோம் அதில MAX(Vanessa Redgrave) என்பவனுக்கு SECRET AGENT பெயர் உள்ள NOG LIST தேவைப்பட்டது அதற்காக அதிகமா விலை கொடுத்து ஏதோ ஒரு AGENT விலைக்கு வாங்கி இருந்தான் அவங்க அவனுக்கு வச்ச பெயர் JOB.இதை கண்டுபிடிக்க தான் நாங்க இந்த ஆபரேஷன் SETUP செய்தோம்...

அதுமட்டும் இல்லாம ஈதன் பேங்க் அக்கௌன்ட் திடிர்னு பணம் வந்ததால் அந்த JOB ஈதன்னா இருக்கும் என சந்தேகம் பட உடனே ஈதன் அங்கிருந்து தப்பித்து தன்னுடைய ஹோட்டல் ரூம் வந்து விடுறார்.அங்க வந்து எப்படியோ MAX CONTACT பண்ணி நாளைக்கு வர சொல்லறாங்க.அப்போ யாரோ வந்து ஈதன் மேல கையை வைக்கின்றனர் தன்னுடைய டீம் இருந்த ஒரு பொண்ணு CLAIRE( இவங்க டீம் லீடர் மனைவி) ஈதன் சந்தேகபடுறார்  அவங்க ஆளா இருக்கும்மா என்று தான் கார் வெடிக்கும் போது கார் இருந்து இறங்கிவிட்டேன் சொல்ல ஈதன் ஒரு மனதாய் நம்ப ஆரம்பிக்கிறார்...

அடுத்த நாள் SECRET WORD போய் சந்திக்கிறார்(தீப்பெட்டி இருக்கா இதான் CODE WORD) MAX சந்திக்கிறார்.உங்ககிட்ட JOB கொடுத்தது ஒரிஜினல் டிஸ்க் கிடையாது DUPLICATE இது நீங்க எங்க இருக்கீங்க என்பதை கண்டுபிடிக்கும் DEVICE சொல்ல அதை நம்பாமல் சிஸ்டம் CONNECT செய்கின்றனர் கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தை போலீஸ் வந்துடறாங்க...ஆனா அங்கே இருந்து எஸ்கேப் ஆக ஈதன் மேல மக்ஸ் நம்பிக்கை வருது அதனால ஒரிஜினல் லிஸ்ட் தந்தா பத்து மில்லியன் டாலர்,அதோட JOB தருவதாய் சொல்ல ஈதன் சம்மதிக்கிறார்...

NOG LIST எடுப்பதற்காக ஈதன் Luther Stickell (Ving Rhames), CLAIRE Franz Krieger(Jean Reno) ஆளுக்கு ஒருத்தரை அழைத்து கொண்டு வராங்க இதில் லூதர் உடனே ஓத்துகொள்கிறார்,க்ரீகேர் கொஞ்சம் யோசித்தாலும் ஒத்துகொள்கிறார்.NOG LIST ORIGINAL விர்ஜினியா லேன்லி உள்ள CIA OFFICE இருக்கு.அங்க ஈதன்,கிளேர்,க்ரீகேர் முணு பேரும் தீயணைப்பு ஆட்களாய் உள்ளே நுழைய வெளியில் லூதர் அனைத்து கம்ப்யூட்டர் சிஸ்டம் முலாமா ஹக் செய்கிறார்.லிஸ்ட் இருக்கும் சிஸ்டம் இருக்கு உள்ளே நுழைய பல செக்யூரிட்டி இருக்கும் நம்ம பாடி ஹிட் அதிகம் ஆனா,கிழ தரையில் வெயிட் அதிகம்(ஒரு தண்ணீர் துளி கூட விழுந்தா) ஆனா,சின்ன சப்தம் வந்தா கூட அலாரம் அடிக்க ஆரம்பித்து விடும்...

ஈதன் மேல இருந்து வந்து நாக் லிஸ்ட் டவுன்லோட் பண்ணிக்கிட்டு எஸ்கேப் ஆகிடறாங்க.ஹோட்டல் ரூம் வந்தா க்ரீகேர் கூட சண்டை வருது...அப்ப தான் கிட் ரிச் தன்னுடைய FAMILY அரஸ்ட்  செய்து இருப்பது தெரிது.ஒருபா காயின் கிட்ரிச் கிட்ட பேசும் போது அவங்க டீம் லீடர் Jim Phelps(Jon Voight) சாகாம இருப்பது தெரியவருது இதுக்கு எல்லாம் கிட்ரிச் தான் காரணம் அவன் தான் இப்படி எல்லாம் செய்தான் சொல்லறார்.அடுத்ததா என்ன செய்ய போராய் என கேட்கும் போது நாளைக்கு ட்ரெயின் நாக் லிஸ்ட் மக்ஸ் கிட்ட தந்த உடனே job என்னிடம் தருவாங்க அவன போலீஸ் கொடுத்தா நான் தப்பித்து விடலாம் என்று தன்னுடைய திட்டத்தை கூறுகிறார்...

ஆனா அதுக்கு முன்பே ஈதன்க்கு பெல்ப்ஸ் தான் ஜாப்என்றும் இதற்கு எல்லாம் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறார்.கிளைமாக்ஸ் பெல்பெஸ் மனைவியும்,க்ரீகேர் பெல்பெஸ்யோட ஆளுங்கனு தெரியவருது...கிட்ரிச் கிட்ட முன்பே இத பத்திய விவரங்களை அனுப்பி விடுவார் ஈதன்.கிட்ரிச் அதே ட்ரெயின் வந்துவிடுவார் மாக்ஸ் அரெஸ்ட் செய்து விடுவார்கள். க்ரீகேர்,பெல்பெஸ் ஹெலிகோப்ட்டர் வெடித்து இறந்து விடுவாங்க...

ETHEN NOG LIST எடுக்கும் போது அந்த காட்சி பார்க்க ரொம்ப அருமையாய் இருக்கும்...
க்ரீகேர்ரோடு ஹோட்டல் நடக்கும் சண்டையின் போது கிரிகேர் பார்த்தல் சிரிப்பாய் வரும்...
இதை எழுத ஒரு மாதத்திற்கு மேல ஆச்சு சோம்பேறி தனம் தான்....பிளேடு...

அப்படியே படிச்சுபுட்டு போய்டாதிங்க ஒரு வோட் போட்டு விட்டு போங்க...

19 comments:

 1. சான்ஸே இல்லை, இம்பாஸிபிள்! கொஞ்சம்(!) லேட்டாக, படம் வந்து பல decade-கள் கழித்து எழுதினாலும் நல்ல விமர்சனம்! ;) அடுத்த பார்ட் எப்போ? இதற்காகத்தான் திரைமணத்தை நேற்றிலிருந்து தேடினீரோ?! இறுதிக்காட்சியில் உங்கள் முகபாவம் அருமை! :)

  ReplyDelete
  Replies
  1. ///சான்ஸே இல்லை,///
   நன்றி நண்பா...இப்பவும் திரைமணம் அப்படியே தான் உள்ளது தமிழ்மணத்தில் தெரியவே இல்லை...
   ////இறுதிக்காட்சியில் உங்கள் முகபாவம் அருமை! :)////
   கூடவே பிறந்தது மச்சி....

   இந்த விமர்சனத்தை எழுதுவற்குள் போதும் போதும்னு ஆச்சு எப்படியோ ஒரு வழியா எழுதி புட்டேன் அதுவும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சனு கட் பண்ணி தான் எழுதினேன் அடுத்த விமர்சனம் கொஞ்ச நாள் ஆகும்...

   Delete
  2. //போதும் போதும்னு ஆச்சு//
   நீங்கள் transliterate பயன் படுத்துகிறீர்களா?

   Delete
  3. என்ன பாஸ் இப்படி கேட்டு புட்டிங்க ட்ரான்ஸ்லேடர் வச்சி என்ன பண்ண?

   Delete
  4. இதன் மூலம் தமிழில் டைப் செய்கிறீர்களா என கேட்டேன்!
   http://www.google.com/transliterate/indic/Tamil

   நான் அப்படிதான் செய்கிறேன் - கொஞ்சம் பழகியதும் டைப் செய்ய எளிதாக உள்ளது!

   Delete
  5. ஆமாம் நண்பா ப்ளாக் ஆரம்பித்த ஆரம்பத்தில் இருந்தே அதை தான் பயன்படுத்துகிறேன்...

   Delete
  6. http://www.google.com/transliterate/indic/Tamil


   இதை யூஸ் பண்ணாதீங்க நண்பர்களே, காரணம் இதில் DRAFT option கிடையாது... நீங்கள் save செய்ய முடியாது இதுவே GMAIL COMPESE il உபயோகம் செய்தல் SAVE செய்யவும் பின் அதை DRAFTIL irunthu eduthu திருத்திக் கொள்ளவும் அவகாசம் கிடைக்கும் . ஏதோ இந்த சிறுவனுக்கு தெரிந்த்ததைக் கூறினேன், இதை விட நல்ல வழி இருந்தால் எனக்கும் கூறவும். Composil அ endru irukkum athai ubayogiyungal....ungalukku yerkanavey therinthirunthal ichiruvanai mannikavum tholargaley......

   Delete
  7. நண்பா உன் அடுத்த விமர்சனம் புத்தம் புதிய திரைக் காவியமான பாசமலரா மனோகரவா இல்லை பராசக்தியா

   Delete
  8. ////இதை யூஸ் பண்ணாதீங்க நண்பர்களே,/////
   நண்பா அதற்கு மேலே New! Download Google Transliteration IME என்று கொடுத்து தமிழ் டைப் செய்ய சின்ன சாப்ட்வேர் உள்ளதே அதை பயன்படுத்தி உள்ளீர்களா...

   அடுத்தது ஒரு புக் பத்தி எழுதலாம் என்று இருக்கேன் இதையே நீங்கள் பெரிய பதிவு என்று சொல்லுரிங்க அந்த புக் அப்ப என்ன சொல்லுவீங்களோ...

   Delete
  9. நண்பா நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. திரை விமர்சனம் என்ற பார்வையிலே சொன்னேன். நீ எவ்வளவு பெரிய பதிவாக எழுதினாலும் படிப்தற்கு நான் தயார். .. மேலும் நான் ஒரு புத்தகப் புழு, உன் புத்தக விமர்சனத்திற்காக ஆவலுடன் உள்ளேன்

   Delete
 2. நல்ல விமர்சனம்.
  ///YAMAHAவில் சிறந்த வண்டி எது ஒரு அறுபது ஆயிரத்தில் சொல்லவும் நண்பா..///

  http://automobiletamilan.blogspot.in/2012/06/automobile-tamilan.html

  ReplyDelete
 3. Soopar machi.. Templatea maathu nanbaa..

  ReplyDelete
  Replies
  1. ஏன் மச்சி இந்த template நல்லா இல்லையா...

   Delete
 4. நண்பா வடிவேலு முரளி காமெடி மாதிரி முப்பது வருசமா கோலம் மட்டுமே போட்டுடு இருக்க மச்சான் நு சொல்ற மாதிரி இருக்கு.

  விமர்சனம் கொஞ்சம் பெருசா போனாலும் நல்ல எழுதி இருக்க சின்னா... வாழ்த்துக்கள்... இடை இடையில உன்னோட நக்கல் தான் கலக்கல்....

  ReplyDelete
  Replies
  1. என்ன நண்பா ஏதோ வடிவேலு முரளி கோலம் என்று சொல்லுரிங்க எனக்கு என்னவென்று புரியவில்லை.......என்ன நண்பா இதையே பெரிய விமர்சனம் என்று சொல்லுரிங்க......

   Delete
 5. வந்திலே MI-3 தான் பெஸ்ட்..எனக்கு மிகவும் பிடித்த படம்..
  ரொம்ப சிம்பிளா விமர்சனம் பண்ணி இருக்கேங்க...
  என்னோட பிரண்ட் எனக்கு கதை சொல்லுற மாதிரி ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 6. நன்றி மச்சி நீங்க இது போல சொன்னது ரொம்ப சந்தோசம்....

  ReplyDelete
 7. உங்கள் தளத்தை பார்க்கும் போது தான் நான் இன்னும் வளர வேண்டும் என்ற உண்மை புலப்படுகிறது ..

  ReplyDelete
  Replies
  1. நண்பா இது உங்களுக்கே ரொம்ப ஓவராய் தெரியவில்லை உங்கள் தளதோடும் நீங்கள் எழுதிய பதிவையும் இங்கு யாரும் சமம் இல்லை...நீங்க தான் எங்களுக்கு எல்லாம் குரு...

   Delete