Friday, June 22, 2012

DHOOM-3யில் சூப்பர்ஸ்டார் ரஜினி...


இந்தி திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக இருக்கிறது  'தூம் 3' . 'தூம்' வரிசை படங்களில் வில்லன் வேடம் தான் பிரபலம்.

முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹிரித்திக் ரோஷன் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகத்தில் அமீர்கான் வில்லனாக நடிக்க இருக்கிறார்.


யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அமீர் கான்,  அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு சிறு வேடம் ஒன்று இருக்கிறதாம். அதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம் அமீர்கான்.

அவரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறாராம் அமீர்கான். ஏற்கனவே ஷாருக்கானின் 'ரா.ஒன்' படத்தில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அப்படத்தில் 'எந்திரன்' படத்தில் உபயோகப்படுத்திய கிராபிக்ஸ் காட்சியை பயன்படுத்தினார்கள்.

'தூம் 3' படத்தில் ரஜினி நடிக்க சம்மதித்தால் ரஜினி, அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா என இந்தியா முழுவதும் பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கப் போவது உறுதி.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்காமல் இருந்தவர்கள் தமிழ் படங்கள் ஓன்று விட்டமல் அனைத்தையும் ஹிந்தி எடுகின்றனர் அதுவும் அனைத்து திரைஅரங்கிலும் பட்டையை கிளப்புது தமிழ் சினிமாவை நம்பித்தான் பாலிவுட் உள்ளதை போல உள்ளது...

ராஒன் தமிழ் ஹிட் அடிக்கணும் என்பதற்காக சூப்பர்ஸ்டார் கிராபிக்ஸ் நடிக்க வைத்தனர் இப்போ ஒட்டுமொத்த இந்தியாவிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் செய்ய தலைவர் தேவைபடுகிறார்...தலைவர் புகழ் எங்கோ செல்கிறது ஜப்பான் வேற எந்திரன் புயலாய் விசுகின்றது....சச்சின் போல தாங்களும் பல சாதனை நிகழ்த்தி கொண்டு தான் உள்ளீர்கள்...

தல அஜித்:-

தல இந்த முறை இரண்டு விஜய் அவார்ட் வாங்கி விட்டார் தல வராததால் அவர் வீட்டுக்கே சென்று விஜய் டிவியினர் தந்துஉள்ளனர்...நிகழ்ச்சியின் போது தலைக்கு அவார்ட் கொடுக்கும் போது என்ன ஒரு விசில் சப்தம் மெசேஜ் வேற அனுப்பி இருந்தார் நிகழ்ச்சி நடைபெறும்போது அதை படித்துகாட்டினார்கள் YOUTUBE அந்த வீடியோ உள்ளது தல ரசிகர்கள் பார்க்கவும்...மறந்தே போய்விட்டேன் இன்று தளபதி பிறந்த நாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....சகுனி சிலர் சரியில்லை(தீவிர அரசியலில் இறங்கிட்ட போல வாழ்த்துக்கள்) என சொல்லுறாங்க என்னமோ தெரியலை....

5 comments:

 1. அப்பிடியா நான் கேள்வி படவே இல்லையே நண்பா..

  ReplyDelete
 2. தலைவர் சாதனையை முறியடிக்க தலைவரால் மட்டுமே முடியும் நண்பா....
  இருந்தும் அவர் மேலும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று எதிர் பார்க்கும் உன்னைப் போல் ஒருவன்

  தல இரண்டு அவர்ட் வாங்கி விட்டாரா...மகிழ்ச்சியான விஷயம் தானே...அதற்காகவே ஒரு தனி பதிவு போட்டிருக்க வேண்டாமா... அந்த link இணைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் ...

  தல அவரது வாங்கிய விஷயம் கூட எனக்குத் தெரியவில்லை. எந்த உலகத்தில் இருக்கிறேன் நான்.... இருந்தும் தல வாழ்த்துக்கள் தல....

  சகுனி நாளை செல்கிறேன் சின்னா, சென்று வந்து சொல்கிறேன் எப்படி இருந்தது என்று..... விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தலைவருக்கு மேலும் ஒரு சிறப்பு ...

  ReplyDelete
 4. சகுனி எனகுப் பிடிக்கவில்லை. காமெடி ஓகே இடைவேளைக்குப் பின் அதுவும் சலிப்பு தட்டுகிறது

  ReplyDelete
 5. @ஹாரி பாட்டர்
  நானும் இப்ப தான் மச்சி கேள்வி பட்டேன்...
  @திண்டுக்கல் தனபாலன்
  நன்றி ஐயா
  @சீனு
  தேங்க்ஸ் மச்சி சகுனி பார்த்துட்டு சொன்னதற்கு தல அவார்ட் வாங்கியது தெரியலை என சொல்லுரிங்க....

  ReplyDelete