Friday, September 7, 2018

ஸ்மார்ட்போன்(SMART PHONE) வாங்கபோரிங்களா?

HONOR,SAMSUNG,ASUS,POCO,ONE PLUS

how to choose a smartphone in 2018 ?
ஸ்மார்ட்போன் புதிதாய் வாங்க போறவங்களுக்கு எதை எடுப்பது என ஏகப்பட்ட குழப்பம் இதை படித்தால் தீரலாம்.எல்லாம் நீங்க எவ்வளவு BUDGET வாங்க போறீங்க என்பதை பொறுத்தே அதே போல உங்களின் தனிபட்ட தேவை கேமரா,GAMING.
இப்போதைக்கு மார்க்கெட்டுக்குள் ஏகப்பட்ட ஸ்மார்ட் போன்கள் நீ முந்தி நான் முந்தி என்று வரத்தொடங்கி விட்டன.. , இந்த நிலையில் ஒரு consumer ஆக அதை பற்றி கொஞ்சம் அறிவுடன் இருப்பது அவசியம் , இல்லையென்றால் எம்மை முட்டாளாக்கி விடுவார்கள்

இப்போது நிலமை எப்படி மாறியிருக்கின்றதென்றால் ஒரு 200 யூரோ மதிப்புடைய ஒரு ஸ்மார்ட்போன் தைரியமாக 1000 யூரோ பெறுமதியுடைய ஸ்மார்ட்போனுக்கு சவால் விடக்கூடிய நிலையில் உள்ளது , ஒரு 200 யூரோக்கள் செலவளித்தால் flagship experiance கிடைத்து விடும் இப்போது , முதலில் flagship devices என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு நிறுவனம் தனது அனைத்து sensorsகளையும் உள்ளடக்கி வெளியிடும் ஒரு ஆகச்சிறந்த மொபைலை flagship மொபைல்னு சொல்லலாம் , samsungஐ எடுத்துகிட்டா s series , Huawei - p series , mate series.இப்படி ஒவ்வொரு கம்பனியும் ஒவ்வொரு சீரிஸ் மொபைலை இப்படி வைச்சிருக்கும்.
ஒரு போன் வாங்கும் போது எதையெல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
1.processor - இதுதாங்க ஸ்மார்போனோட உயிர் மாதிரி , இப்போதைக்கு இதுல எது முதன்மை இடம் வகிக்குதுனா Snapdragon 845 , samsung ஓட note 9 சீரிஸ்ல யூஸ் பன்னிருக்குற சிப்செட் , அதே நேரத்துல Pocophone F1ல கூட இதுதான் யூஸ் பன்னிருக்குறாங்க samsung ஓட விலை 1000 யூரோனா Pocophone வெறும் 200 யூரோதான் இந்த விலை வித்தியாசம் எங்க இருக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க , நீங்க கொடுக்குற காசுல பாதிக்கு மேல அந்த நிறுவனத்தோட brand nameக்குத்தான் போகும்.
Snapdragon 845க்கு போட்டியா அடுத்து வர இருக்குறது huawei ஓட kirin 980 , Snapdragon 845 ஒரு 10 nm processor , ஆனா kirin 980 7nm processor , இந்த nm பத்தி சுருக்கமா சொல்லனும்னா எந்த அளவுக்கு nm குறையுதோ அதே அளவுக்கு அந்த processor உடைய power efficiency , speed எல்லாம் அதிகமா இருக்கும்.
2. Ram - நீங்க ஒரு mid range user ஆக இருந்திங்கன்னா இப்போதைக்கு ஒரு 3 or 4GB Ram இருக்குற மொபைல் உங்களுக்கு போதுமானதா இருக்கும் அதுவே நீங்க gamingல அதிகம் ஈடுபாடு உடையவறா இருந்திங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா OnePlus , Razer Phone தான் கை கொடுக்கும்.
3. battery - இப்போதைக்கு குறைஞ்சது 3000 mAhக்கும் அதிகமான ஒரு battery இருக்குற மொபைலத்தான் தெரிவு செஞ்சாகனும் வேற வழியே கிடையாது , ஏன் சொல்றன்னா இது மாதிரி தெரிவு செஞ்சிங்கனாத்தான் குறைஞ்சது 5 மணித்தியாலத்துக்காவது screen on time அந்த மொபைல் கொடுக்கும்.
4. storage - இது உங்களோட பாவனைய பொருத்தது , உங்களுக்கு storage போதாதுனு ஒரு நிலைமை வந்துச்சுன்னா sd card எல்லாம் யூஸ் பன்னிக்கலாம்னு சொல்லி ஒரு ஆப்சன் இருக்குறதால இது ஒரு பிரச்சனையா இருக்கப்போறதில்ல
5. sensors - ரொம்பவுமே முக்கியமானது இது தான் , ஒரு மொபைல் வாங்குறீங்கன்னா அதுல முதல் என்ன என்ன sensors இருக்குன்னு கவனிங்க , என்னோட கணக்குப்படி இப்போதைக்கு fingerprint , accelerometer, gyro, proximity, barometer, compass இத்தனை sensors உம் அந்த மொபைல்ல இருந்தே ஆகனும்.
6. Camera - இது உங்களின் தேவையை பொறுத்து.
சரி முக்கியமானதெல்லாம் பேசி முடிச்சுட்டன்னு நினைக்குறன் இப்போ ஒவ்வொரு கம்பேனியா நடுத்தெருவுக்கு இழுத்து கலாய்ப்போம்
முதலாவது apple , இங்க ஏன் apple பத்தி ஒரு வார்த்தை கூட பேசலைனு யாராச்சும் கேட்டீங்கன்னா , முதலாவது காரணம் அவங்களோட pricing ,apple ஓட வரலாற்றுலயே அதிகம் விற்பனையான ஒரு மொபைல்னா அது iPhone 6 , கிட்டத்தட்ட 220 million விற்பனையாகிச்சு , ஆனா இதோட பேட்டரி பவர் பத்தி பார்த்தோம்ன 1810mAh தான் , இப்போதைக்கு இந்த போன் உங்களுக்கு 3 மணித்தியாலாம் இல்லைனா 3.30 மணித்தியாலம்தான் screen on time தரும் , தப்பித்தவறி நீங்க ஏதாவது ஒரு confrence callல மாட்டிக்கிட்டீங்கன்னா கண்டிப்பா நீங்க உங்க மொபைல சார்ஜ்ல போட்டுகிட்டேதான் call பேச வேண்டியிருக்கும் கிட்டத்தட்ட ஒரு குரங்கோட நிலைலதான் நீங்க இருந்திருப்பிங்க ஒரு பக்கம் சார்ஜர் இன்னொரு பக்கம் ஹெட்செட் , எத்தனை iPhone யூஸர்ஸூக்கு இந்த experiance கிடைச்சிருக்கு ?
இன்னும் ஒரு விசயம் , எப்படியாவது உங்கள அடுத்த iPhone வாங்க வைக்கனும்னு சொல்லி ஒரு cheap strategyஐ apple யூஸ் பன்னும் , அதுதான் உங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுற software updates சொல்லப்போன இது ஒரு slow poison , உங்க போனை முழுவதுமா slow down ஆக்கி விட்டுடும் இந்த updates , இது நான் சொல்லல appleலே ஒரு தடவை இத அறிவிச்சிருக்கு.
இதையும் தாண்டி சைனீஸ் மொபைல் போன்ஸ் எங்களுக்கு பிடிக்காதுனு சொல்லுறவங்களுக்கு இன்னும் ஒரு செய்திய சொல்லிக்குறன் , apple also assembled in china , இத்தனைக்கு apple மொபைல்ஸோட display manfacturer , samsung தான். அடுத்த வருசத்துல இருந்து LG display manufacturing செய்யப்போகுதுனு ஒரு கதை போகுது உண்மைத்தன்மை எந்த அளவுக்குனு சொல்லி தெரியாது.
அடுத்ததா samsung கம்பனி பக்கம் வருவோம் , ரெண்டு வருசத்து முதல் வந்த ஒரு பழைய சிப்செட்ட வெச்சு , auto brightness sensor கூட இல்லாம 35000 ரூபாவுக்கு ஒரு மொபைல் ரீலீஸ் பன்னுற திறமை samsung கிட்டதான் இருக்கு , fair pricingனு சொல்லுற ஒன்னு இந்த samsung கிட்ட கிடையவே கிடையாது , கொஞ்சம் pricingல அதிக கவனம் எடுக்க வேண்டிய நேரம் இது இப்படியே போய்கிட்டு இருந்துச்சுன்னா அப்புறம் உங்க நிலைமையும் ரொம்ப மோசமா போயிடும் , இப்போதான் Apple was just overtaken by Huawei in global smartphone salesனு சொல்லி செய்தி வந்திருக்கு அடுத்ததா உங்க பேரும் வந்துடும்.
அடுத்ததா நான் fair pricing இருக்குற ஓரளவுக்கு நல்ல மொபைல் manufacturesனு கருதுறவங்கள பத்தி சொல்லப்போறன் Oppo, Vivo,Xiaomi , Huawei , இவங்கதான் இப்போதைக்கு fair pricing , fair specificationனு சொல்லி ரெண்டு விசயத்தையும் கருத்துல எடுத்து மொபைல் ரிலீஸ் பன்னுறாங்க(இன்னும் நிறைய கம்பனீஸ் விடுபட்டுட்டு lenova , asus , இன்னும் ஏகப்பட்டது இருக்கு முக்கியமானத மட்டும் இங்க மென்சன் பன்னிருக்குறன்).
இன்னமும் கொஞ்ச பேருக்கு Oppoனு சொல்லுற பேரை கேட்டாலே வாங்குவோமா இல்லையானு சொல்லி ஒரு மிகப்பெரிய சந்தேகம் வந்துடும் , இந்த கம்பனி பத்தி இன்னும் ஒரு விசயம் சொல்லுறன் எனக்கு இன்னோரு பேரு இருக்குனு சொல்லுற மாதிரி Oppo வின் துனைக்கம்பனிதான் OnePlus , இதுக்கு மேலதிகமா Vivo and Oppo இந்த ரெண்டு கம்பனியையும் கட்டுப்படுத்துறது BBK electronicsனு சொல்லுற ஒரு கம்பனிதான்.
அடுத்து வரப்போகும் வருடங்களில் china artificial intelligent technology இல் ஒரு பேசப்படக்கூடிய இடம் வகிக்கும் , இதில் முக்கியமானது Huawei தனது முதலீடுகளை AI தொடர்பான R&D பக்கம் திருப்பியுள்ளது,

இப்போதைக்கு மார்க்கெட் சிறந்த ஸ்மார்ட்போன் என்றால் ASUS ZENPHONE MAX PRO,REDMI NOTE 5 PRO,POCO F1,ONE PLUS 6

CREDITS:- AASHIK STARK சினிமா தொழில்நுட்பம் என அனைத்தையும் சிறப்பாக FACEBOOK எழுதுபவர்.

அவருடைய FACEBOOK பதிவு தான் இது.இதோ அவருடைய பதிவிற்க்கான லிங்க்

1 comment:

  1. Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

    ReplyDelete