Wednesday, July 18, 2012

பில்லா2 வசூல் (BILLA2 BOX OFFICE RATING)


தல அஜித்தின் பில்லா2 வசூல் தயாரிப்பாளரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது கேரளாவை தவிர...பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது அஜீத்தின் 'பில்லா 2'. இதுவரை எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத ஓப்பனிங் 'பில்லா 2' படத்திற்கு கிடைத்தது. உலகம் முழுவதும் ரிலீஸான பில்லா-2 கிட்டத்தட்ட 1200 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனம் தான் நான் இன்று தான் செகண்ட் டைம் பார்த்து விட்டு வந்தேன்.முதலில் எனக்கே பிடிக்கலை இப்ப ரொம்ப பிடித்து உள்ளது தல ராக்...


சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் 82 காட்சிகள் திரையிட்டார்கள். 'எந்திரன்', 'மங்காத்தா' ஆகிய படங்களின் சாதனையை 'பில்லா 2' முறியடித்தது.

'பில்லா 2' படம் பார்த்தவர்கள் இருவேறு வகையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் படத்தின் வசூலிலும் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் என்று தெரிகிறது.

முதல் நாள் பில்லா2 வசூல் மட்டும் 7.61 கோடி.(விகடன் கூறியது) படம் A சான்றிதழ் என்பதால், அரசுக்கு வரி கட்ட வேண்டும்.  வரி போக 7.61 கோடி பில்லா2 வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. வரி போக இவ்வளவு வசூலா என்று பலதரப்பினரும் ஆச்சர்யப்பட்டு நிற்கிறார்கள்.இன்று காலை நிலவரபடி 34கோடி பில்லா வசூல் செய்து உள்ளது..

தமிழ்நாட்டில் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் " பில்லா 2 படத்தின் வெளியிட்டதற்காக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.  பாக்ஸ் ஆபிஸில் படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது. பண்டிகைகள் இல்லாத, சாதாரண வார இறுதியில் வெளியிட்டு மிகவும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து இருக்கிறது. வரி போக வந்திருக்கும் 'பில்லா 2' வசூல் அஜித்தின் முந்தைய படங்களை விட அதிகம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தினை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் காட்சிகள் உருவான விதம் வீடியோவும், 'இதயம் என் இதயம்' பாடலும் வரும் வாரங்களில் சேர்க்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்து இருக்கிறது.

படம் குறித்து இருவேறு கருத்துகள் உலா வருவதால் வரும் வாரத்தில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்து அஜீத் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இது முழுக்க முழுக்க தல அஜித்திற்காக மட்டுமே படம் ஓடுவதும் வசூல் செய்வதும்.சூப்பர்ஸ்டார் அப்புறம் இப்படி ஒரு வரவேற்ப்பு தல அஜித்துக்கு மட்டும்மே.முதல் நாள் கூடத்தை பார்த்தவுடனே தெரிந்து இருக்கும்.ஆனால் இந்த வசூல் நிலவரம் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது ஹவுஸ்புல்லாக ஓடிய திரைஅரங்கம் எல்லாம் இப்ப காலியாக பல இடங்களில் உள்ளது.இதற்கு மேலும் படம் வசூல் மற்றும் அணைத்து திரை அரங்கிலும் ஒடும்மா சந்தேகம் தான்...

 கேரளாவில் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு இல்லையாம். பில்லா -2 படத்தை கேரளாவில் திரையிடும் உரிமையை 1.5 கோடிக்கு வாங்கிய விநியோகிஸ்தர்கள் போட்ட கணக்கு பொய்யாகிப் போனது என்பது தான் தகவல். ‘A' சர்டிபிகேட் பெற்ற படம், கேளிக்கைவரி ஆகியவற்றை தாண்டி படத்தை வாங்கியதற்கு நஷ்டம் மட்டுமே என்பதையறிந்த விநியோகிஸ்தருக்கு மாரடைப்பு வந்துவிட்டதாம்.

superwoods என்ற தளத்தின் பில்லா2 வசூல் நிலவரம் கூறித்து போட்டுஇருந்தது

Billa 2 1st Day Collections is 10.25 Crores
Billa 2 2nd Day Collections is 10.00 Crores
Billa 2 3rd Day Collections is 10.20 Crores
Billa 2 4th Day Collections is 10.12 Crores
Billa 2 5th Day Collections is 10.08 Crores
Total Collections is 50.65 Crores

இதை எல்லாம் நம்பமுடியாது hollywood படங்களை விட நம்மூர் படத்திற்கு சரியான வசூல் நிலவரம் தெரிவிப்பது இல்லை.

CHENNAI BOX OFFICE CLICK...

தமிழ் படத்தினை பொறுத்தவரை வசூல் நிலவரத்தை நம்பகூடாது...
சிரிக்க வேண்டும் என நினைத்தால் இந்த பதிவை படிக்கவும்...
ஆப்பிள்vsஆன்ட்ராய்ட்
2012 உலகம் அழிந்தால் நம்மூர் நடிகர்கள் என்ன பண்ணுவாங்க

5 comments: