Wednesday, July 18, 2012

ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட் போட்டி வெற்றி பெறுவது யாரு...

நீங்க சிரிக்க இங்கே உத்திரவாதம் ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட்...தொடர்ந்து சினிமா பற்றி பதிவு போட்டுவிட்டதால் தொழில்நுட்பம் பற்றி எந்த ஒரு பதிவும் இந்த வாரத்தில் இல்லை அதான் APPLE VS ANDROID(ஆப்பிள் விஸ் அன்ட்ராய்ட்) வைத்து ஒரு காமெடி பதிவு இதுவும் தொழில்நுட்பம் தான் இருவரில் யார் பெரியவர்கள் என சிரிப்பின் மூலம் காட்டிஉள்ளேன்...
பதிவின் முடிவில் ஒரு சாக்கிங் நியூஸ்(SHOCKING NEWS) உள்ளது.இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்போன்(SMART PHONE) என்பது முக்கிய பங்குவகிக்கிறது அதில் ஆப்பிள் அன்ட்ராய்ட்(APPLE ANDROID) மிக அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் இவர்கள் சட்டையை பிடித்து அடித்து கொள்ளாத ஒரு குறை தான் அது மட்டும் நடந்து விட்டால் ரொம்ப நல்லா இருக்கும்...

திருவிளையாடல் உங்களுக்கு தெரியும் தானே தனுஷ் திருவிளையாடல் இல்லை சிவாஜி அவர்களின் திருவிளையாடல் அதில் அவர்கள் களத்தில் ஆப்பிள் அன்ட்வைத்து ஒரு பதிவு....கொஞ்சம் பெரிய பதிவு தான் ஆனால் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாது....

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.இதனால் மார்கெட்டில் இருக்கும் அனைத்து டெவலர்ப்பர்களுக்கும் அறிவப்பது என்னவென்றால்..அண்ணன் ஸ்டிவ் ஜாப்ஸ் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகெஷனை விட சிறந்த ஒரு அப்ளிகெஷனை கண்டுபிடிக்க முடியாமல் மண்டையை போட்டுவிட்டார். அவரின் ஆன்மா சாந்தி அடையும்படி ஒரு சிறந்த ஆப்ஸ் கொண்டுவருபவர்களுக்கு ஐபோனைவிடவும் சிறப்பான ஆண்ட்ராய்டு போன் வழங்கபடும்ம்ம்ம்ம்ம்...!

நாகெஷ்: அய்ய்யொ..அய்ய்ய்ய்யொ..ஆண்ட்ராய்டு போனாச்செ..ஆண்ட்ராய்டு போனாச்செ.. ஒரு வருஷம் உட்காந்து ப்ரொகிராம் எழுதுனாகூட நோக்கியா 1100 போன் தான் வாங்கலாம்..நான் என்ன பன்னுவென்..! நான் என்ன பன்னுவென்..!
(மண்டபத்துக்குள்..ஆண்ட்ராய்டு டெவலப்பர் சிவாஜி நுழைகிறார்.!)

சிவாஜி: டெவலப்பரெ..!
நாகெஷ்: யாருய்ய்யா அழைத்த்து.
சிவாஜி: அழைத்த்து நான் தான்
நாகெஷ்: யாருய்யா நீங்க
சிவாஜி: ஆண்ட்ராய்டு போனினிலெ ஆப்ஸ் எழுதி, ஐபோனுக்கு ஆப்புவைக்கும் டெவலப்பர் நான்.
நாகெஷ்: இப்ப எதுக்குய்யா வந்தீங்க?
சிவாஜி; போட்டியில் ஜெயித்து நீ ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டாமா?
நாகெஷ்: யாரு எங்கிட்டெயெவா..பாக்கதான் லூசு டெவலப்பர் மாதிரி இருப்பென்..ஆப்ஸ் எழுதுறதுல நான் மன்ன்ன் தெரியுமா.
சிவாஜி; அப்படியா..எம்மை சோதித்து பாரென்..உமக்க்கு திறமை இருந்தால்? கேள்விகளை நீ கேட்கிறாயா..இல்லை நான் கேட்கட்டுமா?
நாகெஷ்: அய்ய்ய்யொ..எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...!
சிவாஜி; சரி கேளும்..கேட்டு பாரும்.

பிரிக்க முடியாத்து என்னவொ.?
ஆண்ட்ராய்டும் ஃப்ரி ஆப்ஸ்ம்..!

சேர்ந்தெ இருப்பது?
ஐபோனும் தலைவலியும்

சொல்லகூடாதது?
ஐட்யுனிடம் கிரடிட் கார்ட் நம்பர்

சொல்ல கூடியது?
ஆண்ட்ராய்டின் அற்புதம்

மண்டையை உடைப்பது?
ஐபோனின் கேஸ்

அறிவை திறப்பது?
ஆண்ட்ராய்டு போன்

டிசைனுக்கு?
சாங்சங் கேலக்ஸி


ஆடம்பரத்த்துக்கு?
ஐபோன் 4S

அழகுக்குக்கு?
கேலக்ஸி நோட்

அலப்பறைக்கு?
ப்ளாக்பெரி போல்ட்

புரியாதாது?
ஐபொனின் நெட் ஒர்க் சிக்னல்

ஐபோனில் பேசினால்?
போன் அயர்ன் பாக்ஸ் போல் சூடாகும்.

ஆண்ட்ராய்டில் பேசினால்:
ஹாட்டான ஃபிகர் செட் ஆகும்?

மொக்க ஆப்ஸ்க்கு?
ஐபோன் டெவலப்பர்ஸ்

அசறடிக்குற ஆப்ஸ்க்கு?
ஆண்ட்ராய்டு டெவல்ப்பர்ஸ்.

ஆசைக்கு: நீ..!
அறிவுக்கு: நான்.!

அய்ய்யா....ஆளை விடும்..நீர் டெவலப்பர்..நீர் டெவலப்பர்...
அப்போது நீர்..?
நான் ஒரு டப்பா டெவலப்பர்.
(ஆப்ஸை வாங்கி கொண்டு தருமி பாண்டியனின் தமிழ் திருச்சபைக்கு செல்கிறார் )

பக்கி எதையோ கொடுக்குது கடிச்சி வைக்க போகுது...

தருமி ஆப்ஸ் கோடை கொண்டு போய் பாண்டிய மன்ன்னிடம் கொடுக்கிறார்.

அது இது தான்..

”பொங்குதோர் வாழ்க்கை அஞ்சியொர் தும்பி,
லைனில் இருப்பவரை ஃபிகர் என நம்பி,
மூன்று நாள் தொடர்ந்து கடலை போடுவாய் தம்பி..!”

பாண்டிய மன்ன்ன் பிரமித்து போகிறான்.
ஆஹா..அருமையான ஆப்ஸ்..ஐபோன் அஸ்திவாரத்தையெ ஆட்டி வைத்த கோட் இது. என் ஐயம் தீர்ந்த்து. ஸ்ட்வ் ஜாப்ஸின் ஆன்மா சாந்தியடைந்த்து.

தருமி: மன்னா..பரிசு..

பாண்டிய மன்ன்ன்: யார் அங்கே ஒன் இயர் வாரண்டியோடு ஒரு ஆண்ட்ராய்டு ஸாம்ஸங் கேலக்ஸி எஸ் 2 கொண்டு வாருங்கள்..!

நக்கீரன்(ஐபோன் டெவலப்பர்): மன்னா.. சற்று பொறுங்கள்..தருமியெ..சற்று இப்படி வாரும்.

தருமி: வந்தென்.

நக்கீரன்: இந்த ஆப்ஸ்க்கு கோட் எழுதி கொடுத்த்து யார்..?

தருமி: ஏன். நான் தான் எழுதினென். பின்ன டைடெல் பார்க் வாசலில் யாரிடமாவது ஒசிலெ எழுதி வாங்கிய மாதிரியாகவா இருக்கிறது..?

நக்கிரன்: அப்படியானால் அதை தங்கள் ஐபோனில் இன்ஸ்டால் செய்து செக் செய்து விட்டு , பின்னர் ஆண்ட்ராய்டு போனை பெற்றுச்செல்ல்லாமெ..?

தருமி: ஐய்ய்ய்ய்யொ..எங்கிட்ட நோக்கியா பேசிக் 1120 தான இருக்கு. அதுல கீஸ்லாம் கூட அழிஞ்சு போச்செ..! அதுல நம்பர் கூட டயல் பன்ன முடியாதெ.!

நக்கீரன்: மன்ன்ன் சரியான ஆப்ஸ்க்கு பரிசளிக்கிறான் என்றால் அதற்க்கு மகிழ்ந்து பீர் அடிக்க போவது இந்த நக்கீரன் தான், அதெ சமயம் தவறான ஒரு ஆப்ஸ்க்கு ஆண்ட்ராய்டு பரிசளிக்கிறான் என்றால் அதற்க்கும் வருத்த பட்டு பீர் அடிக்க போகிரவனும் இந்த நக்கீரன் தான்.

தருமி: மைண்ட் வாய்ஸ் (எப்டி போனாலும் கேட்டு போட்றாய்ங்களெ..எஸ்ஸாடுவொம்..!)

(தருமி எஸ் ஆகி வெளியேறி போய்..சிவாஜிக்கு மிஸ்ட் கால் கொடுக்கிறார்)


சிவாஜி யும் மொபைலில் பைசா இல்லாமல் ரெண்டு மிஸ்ட் கால் கொடுக்கிறார். தருமி மண்டபத்தில் காத்திருக்க, ஒரு வழியாக சிவாஜி காசு இல்லாமால் , காய்கறி லாரி புடிச்சு வந்து சேறுகிறார். 

தருமி: யோவ்...நீர் எழுதி குடுத்த ஆப்ஸ் கோட ஜங்க்னு சொல்லிட்டான்யா ஒருத்தன்.

சிவாஜி: என்ன..எவன் அவன்..?

தருமி: ரொம்ப சீன் காமிக்காத..நானெ கூப்டு போறென் வா.

(தமிழ் திருச்சபை கூடியிருக்கிறது. அனைத்து ஐபோன் டெவலப்பர்களும் அப்ளிகெஷன் கோட் எழுத தெரியாமல் மொபைலில் கேம்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்)

சிவாஜி: என் ஆப்ஸ் கோடில் குற்றம் கண்டவன் எவன்..?

நக்கீரன்(தலைமை ஐபோன் ஆப்ஸ் டெவலப்பர்): அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ட்யுட் மற்றும் கைய்ஸ் என்று அழைத்தால் போது மானது.

சிவாஜி(ஆண்ட்ராய்டு அத்தாரிடியின் தலைமை டெவலப்பர்): ஒகெ..கைய்ஸ்..எவன் அவன் என் ஆப்ஸ் கோடில் குற்றம் கண்டது?

நக்கீரன்: கோடில் குற்றமில்லை..பொருளில் தான் குற்றம் உள்ளது.

சிவாஜி: என்ன பொருள் குற்றம் கண்டீர் என் ஆப்ஸ் கோடில்.?

நக்கீரன்: முதற் கண் உங்கள் கோடை சற்று கூறும்.

சிவாஜி: ”பொங்குதோர் வாழ்க்கை அஞ்சியொர் தும்பி,
லைனில் இருப்பவரை ஃபிகர் என நம்பி,
மூன்று நாள் தொடர்ந்து கடலை போடுவாய் தம்பி..!”
அவ்வளவுதான்...!

நக்கீரன்: கோடின் டிஸ்கிரிப்ஷன்..?

சிவாஜி: ஆண்ட்ராய்ட் போனிலெ கடலை போடும் போது, எதிரெ பேசுபவர் நல்ல ஃபிகரா மொக்க ஃபிகரா என்பதை கேமிரா மூலமாக கண்டுபிடுத்து தொடர்ந்து மூன்று நாள் கடலை போடும் படி என் ஆப்ஸ் கோடை அமைத்து இருக்கிறென்..!

நக்கீரன்: இதன் மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்பும் அவுட் கம்..?

சிவாஜி: காலம் காலமாக கடலை போட்டு, ஆயிரக்கணக்கில் போன் பேசி, இறுதியில் மொக்க ஃபிகர் என தெரிந்து டாஸ்மாக்கில் மட்டையாகும் இளைஞர்கள், இந்த ஆப்ஸ் பயன்படுத்தி பைசா மிச்சம் பன்னும் வகையில் கோடை அமைத்து இருக்கிரென்.

நக்கீரன்: ஒருக்காலும் இப்படி இருக்க முடியாது. எந்த போனும் 3 நாள் பேட்டரி வருவதில்லை. அப்படி யிருக்க எப்படி மூன்று நாள் தொடர்ந்து போனில் கடலை போட முடியும். இந்த ஆப்ஸை ஏற்று கொள்ள முடியாது.

சிவாஜி: அட்டு ஐபோனிலெ 10 நிமிடம் பேசி பேட்டரி காலியாகும் கும்பலில் இருக்கும் நக்கீர்ரோ..என் ஆப்ஸில் குற்றம் சொல்பவன்.?

நக்கீரன்: ஆம்..நேக்கியா, ஹச்டிசி, எல்டி, மற்றும் சோனி எரிக்ஸன்..அனைத்து போன்களுக்கும் அப்படிதான்.

சிவாஜி: தற்போது மார்கெட்டில் பட்டையை கிளப்பும் சாம்சங் கேலக்ஸி எஸ்2 போனுக்கும் அது தானொ..?

நக்கீரன்: சாம் சங் அல்ல, மொழி தோன்றா காலத்தெ முன் தோன்றிய மோட்டொரொலா ஃபோனுக்கும் அப்படிதான்.

சிவாஜி: உமது பாண்டிய மன்ன்ன் உபயோக படுத்தும் ஐபேடுக்கும் அதே நிலைதானொ..?

நக்கீரன்: ஐபேடு என்ன. நான் அன்றாடம் வழிபடும் என் ஆண்டவன் சிவன் யூஸ் பண்ணும் சோனி டேப்லட்டுக்கும் அப்படி தான்.

சிவாஜி: நிச்சயமாக..?
நக்கீரன்: நிச்சயமாக

சிவாஜி: சத்தியமாக?
நக்கீரன்: எங்க சின்னாத்தா மீதி சத்தியமாக.

சிவாஜி: உன் அட்டு ஐபோன் மீது ஆணையாக?
நக்கீரன்: என் ஐபோனில் உள்ள சைனா மேக் 8ஜிபி எஸ்டி கார்டு மீதி ஆணையாக..!

சிவாஜி: நக்கீரா..என்னை நன்றாக பார்..நான் எழுதிய கோட் குற்றமா.?

நக்கீரன்: நீரே முக்கலும், முனகலுமாய் ஆகுக. குமுறி குமுறி அழுதாலும் குற்றம் குற்றமெ..!

சிவாஜி: நக்க்க்க்க்க்கீராராராராரா.....!

(நக்கீரன் மட்டையாகி மீண்டு ஐபோனை தலையை சுற்றி காசியில் கடாசி விட்டு, ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியில் சேருகிறார்..மீண்டும் அடுத்த சீக்வென்ஸ்ல் சந்திப்பொம்..மெண்டல் பாண்டி.! (விட்ற மாதிரியில்ல::)))

SHOCKING NEWS:-
          நான் சொல்ல போற செய்தி என்னவென்றால் இது என்னோட பதிவு அல்ல எல்லோரும் வாயை அப்படியே முடிக்கொள்ளவும் துப்பிவிட வேண்டாம் உங்க கம்ப்யூட்டர் DISPLAY நாறிவிடும் என்னடா இவ்வளவு அறிவாய் எழுதுரானே என யோசிக்கும் போதே தெரியவேண்டாம் இது என்னுடையது இல்லை என்று....ட்விட்டர் கட்டதொரா என அன்போடு அனைவராலும் அழைக்கபடுபவர் ட்விட்டர் நீங்க இருந்து இருந்தால் இவரை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும்...பேருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் இருப்பார் ரொம்ப HANDSOME இருப்பார் பல பொண்ணுங்க இவரை தான் FOLLOW செய்கின்றனர்...

இவரை ட்விட்டர் முதல் அறிமுகம் இவர் போடும் ட்வீட் எல்லாம் சிரிக்காதவனை கூட சிரிக்க வைக்கும் இவரை ட்விட்டர் FOLLOW செய்தால் உங்களுக்கு நல்ல ட்வீட் கிடைக்க நான் உத்திரவாதம் அவர் ட்விட்டர் ID  twitter.com/kattathoraஅப்புறம் அவர் MANI2MANY என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறார் அவர் ப்ளாக் படிதிங்க அவ்வளவு தான் அவர் எழுத்துகள் அனைவரையும் சிரிக்க வைக்கும் போய் பாருங்கள்...

TWITTER ID:-twitter.com/kattathora
BLOG ADDRESS:- MANI2MANY 

9 comments:

  1. ஹா.. ஹா.. நல்ல கற்பனை... முடிவில் உங்களது நண்பரின் தளத்தை அறிமுகப் படுத்தி விட்டீர்கள்... (இது நல்ல ஐடியாவா இருக்கே...)

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)

    என் தளத்தில் :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. நண்பா இந்த வார நண்பர் பகுதியில் உன் பகுதியை உரிமையோடு கேட்காமலே பகிர்கிறேன்.. இரவு வந்து பதிவை வாசித்து விடுகிறேன்

    ReplyDelete
  3. இவ்வளவு நல்லா யோசிச்சிருக்கானே பயபுள்ள ... என்னத்த சொல்லி பாராட்டுறதுன்னு யோசிச்சிட்டே கீழே வந்தேன். நியுஸ்னா பயங்கர ஷாக்காகிட்டுது. ஹி ஹி ...

    (சூப்பரான கான்செப்ட். வாழ்த்துக்கள்) - யோசித்த நண்பருக்கு. :)

    ReplyDelete
    Replies
    1. காப்பி பண்ணி போட்ட எனக்கு எதுவும் இல்லையா

      Delete
  4. கொஞ்ச நாளா குசும்பு ஜாஸ்தி ஆயிட்டு நண்பா.. சூப்பர் பதிவு..

    ReplyDelete
    Replies
    1. நான் என்னையா பண்ணினேன் அமைதியாய் இருக்கும் என்னை போய் இப்படி சொல்லுரிங்க ஹாரி....

      Delete
  5. // ”பொங்குதோர் வாழ்க்கை அஞ்சியொர் தும்பி,
    லைனில் இருப்பவரை ஃபிகர் என நம்பி,
    மூன்று நாள் தொடர்ந்து கடலை போடுவாய் தம்பி..!”// ஹா ஹா ஹா படிபாவி நா கூட நீ தான் எழுதுநியூன்னு நினைச்சன் சூப்பர் தல...நா பதிவு எழுதினவனுக்கு சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. நான் காப்பி பண்ணி போட்டதால் தானே உங்களுக்கு தெரிந்தது இல்லை என்றால் எப்படி தெரியும் அதனால எனக்கு ஏதாவது சொல்லியே ஆகணும்

      Delete