Friday, July 6, 2012

இந்தியாவின் ஆரம்பத்தில் மொபைல் சேவை எப்படி இருந்தது...

இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே அதிகம் MOBILE பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வருவதில் சந்தேகம்மே இல்லை.உலகில் உள்ள அனைத்து MOBILE நிறுவனமும் தங்களின் விற்பனை செய்யும் நாட்டில் இந்தியா கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஆப்பிள்(APPLE) மட்டும் கொஞ்சம் லேட்டா தான் இந்தியாவில் வருகின்றனர்.


அவனுக்கே தெரியும் இந்தியாவில் இதை எல்லாம் வாங்க மாட்டானுங்க என்று நம்ம ஆளுங்க எல்லா வசதியும் இருக்கனும் ஆனா விலை குறைவா இருக்கனும் என்று நானும் அப்படி தான் இப்படி இருந்தா எப்படிங்க ஆப்பிள் நம்ம ஊருக்கு எடுத்த உடனே வருவான்...ஆனா முன்பை விட இந்த APPLE 4S இந்தியாவில் ரொம்ப சீக்கிரம் அறிமுகம்(நம்மளும் ஸ்டீவ் நினைத்து அழுதுகொண்டு இருப்போம் என நினைத்து விட்டார்களோ என்னவோ) செய்து விட்டனர்.இந்த நிலை ரொம்ப காலத்திற்கு இருக்காது....


நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லாமல் எதையோ சொல்லிகொண்டு இருக்கேன் இந்தியாவில் செல்போன் சேவை 1995ம் ஆண்டு தொடங்கபட்டது.இப்போது பதினேழு வருடம் ஆகிவிட்டது.15.08.1995 அன்று முதல் மொபைல் டெல்லியில் சேவை தொடங்கியபோது முதன் முதலாக அன்றைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவை டெல்லியில் இருந்த மத்தியஅமைச்சர் சுக்ராம் தொடர்பு கொண்டு பேசினார்.இவங்க தாங்க
இந்தியாவில் முதலில் மொபைல் பேசினது...

அன்றைக்கு அவர்கள் பயன்படுத்திய செல்போன் விலை 50ஆயிரம் ருபாய் கேட்கவே காமெடி இருக்கு அப்ப கேமரா கூட இல்லாமல் வைத்து இருந்த மொபைல் ஐம்பது ஆயிரம் என்றால் அப்ப நினைத்து கூட பார்க்காத பல வசதியை கொண்ட ஆப்பிள்,ஆன்ட்ராய்ட் எல்லாம் என்ன சொல்ல....

ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17ரூபாய்கட்டணமாய் வசூக்கபட்டது.வெளியில் இருந்து incomimg callக்கு கூட 8ரூபாய் கட்டணமாக வசூல்(வசூல் ராஜாவா இருந்து இருப்பானுங்க போல) செய்யபட்டது...இது மட்டும் இல்லாமல் மாதம் மாதம் 600ரூபாய் மாதகட்டணமாய் செலுத்த வேண்டி இருந்தது.அப்ப நினைத்து பாருங்க இப்ப மொபைல் நிறுவனம் நமக்கு தெரியாமல் பத்து ரூபாய் எடுத்து கொண்டால் கூட என்ன ஒரு கோபம் வருது அந்த டைம் எவ்வளவு ரூபாய் மாத கட்டணம் INCOMING,OUTGOING பணம் வசூல் செய்து உள்ளனர்...

மிக பெரிய பணகாரர்கள்(அவனுங்க கூட அழுது இருப்பாங்க) மட்டும்
பயன்படுத்தும் நிலையில் இருந்த மொபைல் போன் இன்று கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர்கள் கூட பயன்படுத்தும் அளவிற்கு
வந்துவிட்டது...இந்த நிலை 2009 அப்புறம் தான் மாறியது 17ரூபாய் இருந்த
OUTGOING CALL வசதி 50பைசா,10பைசா என வந்து இப்போ முற்றிலும் இலவசம் என வந்துவிட்டது இப்ப பைசா கூட செல்லாது...இப்ப ரோமிங் சேவை கூட இலவசமாய் மாற போகிறது...

அப்போது ஐம்பது ஆயிரத்தில் இருந்த மொபைல் இப்ப ஆயிரம் ரூபாயில் வாங்கலாம் அப்போ இன்னும் ஒரு பத்து ஆண்டு சென்றால் ஆப்பிள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலை வந்துவிடும்மோ என்னவோ...

இப்போது இந்தியாவில் உள்ள இரண்டு மொபைல் சேவை 1.G.S.M(GLOBAL SYSTEM FOR MOBILE) 2.C.D.M.A(CODE DIVISION MULTIPLE ACCESS) GSM தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் AIRCEL,AIRTEL,VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள் வழங்கிவருகின்றன இதில் AIRTEL வழங்கியதை அப்படியே திரும்ப எடுத்து கொள்ளுவான்.CDMA தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ்,TATA,VIRGIN வழங்கி வருகிறது இதில்  ரிலையன்ஸ் திரும்ப எடுத்து கொள்ளுவான்...

செல் போன் சேவை வெற்றிக்கு முக்கியமான காரணம் 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வருமானத்தை பங்கிட்டுகொள்ளும் முறை அமலுக்கு வந்ததுதான்.இதன் படி மொபைல் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை செல்போன் சேவை வழங்கும் ஆப்பரேடர்களும் அரசும் பங்கு போட்டு கொள்ளும் மற்றும் ஒரு காரணம் CDMA தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது தான்.இந்த இரண்டு காரணமும் மொபைல் சேவை இந்தியாவில் மிக பெரிய வெற்றி அடைய காரணம் ஆகும்.இன்று இந்தியாவில் மட்டும் SMS அனுப்புவதில் மாதம் ஒன்றுக்கு 500கோடிக்கு மேல் அனுப்பபடுகின்றது.

1995 TO 1999வரை இந்தியாவில் 12லட்சம் செல்போன் உபயோகத்தில் இருந்தது
.செல்போன் விலை குறைப்பால் 2001ல் 54லட்சம் செல்போன் விற்பனையானது.2003ல் மொபைல் போன்க்கு வரும் இன்கம்மிங் கால்கள் இலவசம் என அறிவிக்கபட்டது அந்த கால கட்டத்திலேயே CDMA என்னும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது.இதனால் செல்போன் வைத்து இருபவர்களின் எண்ணிக்கை 1கோடியே 25லட்சம்மாய் உயர்ந்தது.இந்தியாவில் தற்போது 952 MILLION செல்போன் உபயோகத்தில்
உள்ளது.செல்போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில்
உள்ளது.இந்த வளர்ச்சிக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மொபைல் இணைய சேவையும் ஒரு காரணம்...

16 comments:

  1. நன்றாக தகவல் சேகரித்து உள்ளீர்கள்.. தினமலருக்கே அனுபலாம்.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லிடிங்க அப்புறம் அனுப்பாமல் வேற வேலை என்ன.....

      Delete
    2. :)நிஜமாகவே நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு!

      Delete
  2. அறிய தகவல்களை சேர்த்து கொர்வைகிய விதம் அருமை நண்பா, நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் உன் உழைப்பு அதை இழந்து விடாதே, ஆமா நீ என் கூட CHAT பண்ண வருவேன்னு சொன்ன ஆளைக் காணோமே

    ReplyDelete
    Replies
    1. அனைத்து விஷயம்மும் எளிதாய் இணையத்தில் கிடைக்கும் நண்பா...நீங்க ஒரு மெயில் அனுப்பினால் தானே நீங்க ஆன்லைன இருக்கீங்களா என தெரியும் தெரியாமல் எப்படி நண்பா...

      Delete
  3. ஆஹா... ஒரு சூடான இடுகையை மிஸ் பண்ணிட்டேனே!!!

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. எங்க மிஸ் செய்தீர்கள் கரெக்ட்டா வந்தாச்சு....மெயில் அனுப்பினேன் பார்த்தீர்களா...

      Delete
  4. என் ப்ளாக்கில் போடாமல் மிஸ் பண்ணிட்டேனே என்று சொன்னேன்!

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. அது தான் இப்போது நிறைவேறி விட்டதே...

      Delete
    2. ஆமாம் என்ன செய்ய...

      Delete
  5. நல்ல பதிவு நண்பரே! அப்படியே இங்கயும் வரலாமே:-
    http://www.naveensite.blogspot.in/2012/07/presentation.html முக்கியம் உங்களுக்கு கண்டிப்பா பாருங்க!!! அப்படியே கருத்து கூறுங்கப்பா!!!>.!!

    ReplyDelete