Sunday, July 22, 2012

SUPER STAR தில்லுமுல்லுவில் MIRCHI சிவா...யாருயா இந்த அஜித் பில்லா2...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா.கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தனர்.க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் தோன்றினார்.
சரிதாவின் தங்கை விஜி இதில் ரஜினி தங்கையாக அறிமுகமானார்.

மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் கலக்கின.தங்கங்களே தம்பிகளே பாடலில் எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா, கமல் போல அசத்தலாக இமிடேட் செய்திருப்பார் ரஜினி. கடைசியில் பில்லா ரஜினியாகவும் தோன்றுவார்.

இந்த படம் தற்போது ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் நடிக்க சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ் படம், சென்னை 28, சரோஜா, கலகலப்பு என காமெடிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.

சிவாவிடம் இது குறித்து கேட்ட போது, "தில்லு முல்லு ரீமேக்கில் நான் நடிக்கப் போவது உண்மைதான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த பிரமாதமான படம் இது. அவர் பேரை கெடுக்காம இருக்கணுமே என்ற பயமும் உள்ளது!," என்றார்.தம்பி உன்னையெல்லாம் தலைவர் வேடத்தில் நடிக்க வைப்பதே பெருசு...
ANGRY BIRD நிறுவனத்தின் புதிய கேம் AMAZING ALEX...

யார் இந்த அஜீத் குமார்:-

தல அஜீத் குமாரின்(AJITH KUMAR) பில்லா 2(BILLA2) படத்துக்கு முதல் நாள்(FIRST DAY)காட்சிக்கு(SHOW) கத்தாரில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து யார் இந்த அஜீ்த் குமார் என்று அரபிக்காரர்கள் கேட்டதாக ஊடகங்கள்(MEDIA) செய்தி வெளியிட்டன.இந்த செய்தி வந்து ஒரு வார காலத்திற்கு(ONE WEEK) மேலே ஆகிறது...அஜீத் குமாரின் பில்லா 2 JULY13 தமிழகம் மட்டுமின்றி உலகின்(WORLD) சில பகுதிகளிலும் ரிலீஸ்(RELEASE) ஆனது. கத்தாரில்(QATAR) உள்ள தமிழர்களுக்கு அஜீத்தின் படத்தை கடந்த வியாழக்கிழமையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. படம் ரிலீஸான முதல் நாள், ஏகப்பட்ட கூட்டம் திரண்டுவிட்டதாம்.கூட்டத்தை(CROWED) கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவிட்டார்களாம். தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' என்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.

GOOGLE NEXUS7 TABLET ORDER கொடுக்க கிளிக்

தலைவர் மிஷ்கின் முகமூடி:-

உலகப் புகழ்பெற்ற குங்ஃபூ நிபுணர் மறைந்த புரூஸ்லீயுடன் பணியாற்றிய ஸ்டன்ட் கலைஞர், மிஷ்கினின் முகமூடி படத்தில் பணியாற்றியுள்ளார்.யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகமூடி படத்தின் ஆடியோ(AUDIO) வெளியீட்டு விழா(FUNCTION) நேற்று சென்னையில் நடந்தது.

இநதப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் மிஷ்கின், " இந்தப் படத்தில் ஜீவாவின் பாத்திரம் புரூஸ்லீ. மறைந்த நடிகர் புரூஸ்லீ கற்றுக் கொடுத்த குங்ஃபூ(KUNG FU) தற்காப்புக் கலையின் ஒரு அரிதான பிரிவை படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அதற்காக, அந்தக் கலை நன்கு தெரிந்தவர்களைத் தேடி ஹாங்காங்குக்கே(HONG KONG) போனோம்.

அப்போதுதான் புரூஸ்லீயுடன்(BRUCE LEE) பணியாற்றிய அந்த ஸ்டன்ட் கலைஞரைச்(STUNT MASTER) சந்தித்தோம். என்டர் தி ட்ரேகன் படத்தில் புரூஸ் லீயுடன்(BRUCE LEE) சண்டை போடும் கலைஞராக நடித்து, பின்னர் ஹாலிவுட்(HOLLYWOOD) படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகப்(STUNT MASTER) பணியாற்றும் அவர் எங்கள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டது அதிசயம்தான். ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் போலிருக்கிறது என்றார்.

படத்தில் ஜீவாவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக சூப்பர் மேன் உடையை ஹாங்காங்கை சேர்ந்த ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜீவடிவமைத்துள்ளனர். ஆகஸ்ட் 31-ந் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

21 comments:

 1. ரஜினிக்கு காமெடியும் வரும் என்று நிருபித்த படம் தில்லுமுல்லு....பார்க்கலாம் எப்படி சிவா பண்ணுறார் என்று..

  ReplyDelete
  Replies
  1. ரஜினி செய்த காட்சியில் எல்லாம் சிவாவை நினைத்து பார்த்தால் கொடுமையாய் இருக்கும் அஜித்தையே பில்லாவில் நடித்ததை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை...

   Delete
 2. டெம்ப்ளேட் ரொம்ப சிம்பிளா & ரொம்ப நல்லா இருக்கு தல..

  ReplyDelete
  Replies
  1. நன்றாய் உள்ளதா ரொம்ப சந்தோசம் இதற்கு எல்லாம் கணினி கல்லூரி தான் காரணம் இதையும் கொஞ்சம் மாற்ற வேண்டிஉள்ளது...

   Delete
 3. ரஜினி இடத்துல என்னால சிவா வ நினைச்சி கூட பக்க முடியல அவனுக்கு சிரிப்பு மட்டும் தான் யா வரும். தில்லு முள்ளு ல எல்லாமே இருக்கும்... என்னோட ஆல் டைம் favorite படம் அது

  பில்லா டூ வச்சு வருமானம் பாக்காம நீ விடமாட்ட போல இருக்கு TM 1

  ReplyDelete
  Replies
  1. ராஜ்சொன்னது தான் நண்பா உனக்கும் சத்தியமா சூப்பர்ஸ்டார் இடத்தில் பெரிய மூக்கு சிவாவை நினைத்து பார்த்தால் சக்க காமெடி...

   தலையோட பில்லாவை வைத்து எக்கசக்கமாய் வருமானம் நானும்பார்த்துவிட்டேன் அவரும் பார்த்து விட்டார்... தமிழ்மணத்திற்கு நன்றி நண்பா...

   Delete
 4. 50000 hits-ஐ கடந்ததிற்கு வாழ்த்துக்கள் நண்பா! :)

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம் நீங்களும் நெருங்கி விட்டீர்கள் உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

   Delete
 5. ///தம்பி உன்னையெல்லாம் தலைவர் வேடத்தில் நடிக்க வைப்பதே பெருசு...///

  நல்லாச் சொன்னீங்க... (த.ம. 2)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்......நீங்க சூப்பர்ஸ்டார் ரசிகரா...

   Delete
 6. //தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' என்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.//அப்படியா பலே பலே

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை வந்தீர்கள் என்று தெரியாது ஆனால் முதல் கமெண்ட்க்கு நன்றி...

   Delete
 7. அட ஒரு பதிவு கூட போட இருந்தேன் உனது டெம்பிளேட் இனை பற்றி.. நல்லா இருக்கு நண்பா.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. என்னாது என்னோட டெம்ப்ளேட் வைத்து போஸ்ட்டா ஹாரி என்ன கலாய்பதில் ரொம்ப குறியாக இருக்கீங்க போல....

   Delete
 8. நான், நீ, சீனு எல்லாருடைய கடைசி பதிவும் ரஜினியை பற்றியோ அல்லது சார்ந்து தான்.. ஹி ஹி..

  ReplyDelete
 9. ஹி ஹி ... எனக்கு சிவாவின் டைமிங் காமெடி ரொம்பப் புடிக்கும். தமிழ்ப்படத்தில் அவரின் மொக்கை ஜோக்ஸ் பிடிச்சிருந்துது. தில்லுமுல்லு படத்தில் எப்படி இருக்குமோ தெரியல. பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கலகலப்பில் கூட அமிதாப் மாமா என அடி வாங்க வைப்பாரே அதை பார்த்து விழாமல் எல்லாம் சிரித்து உள்ளேன்......டார்க் நைட் பார்த்தாச்சா..

   Delete
 10. வில்லத்தனம் கலந்த அந்த ஹீரோயிசம் எப்படியிருந்தாலும் தலைவர் தலைவர்தான்.பாப்போம் சிவாவின் திறமையை..

  ReplyDelete