Sunday, November 18, 2012

மம்மியின் செல்போன்(அம்மாவின் கைபேசி) - அரைகுறை SPECIFICATION விமர்சனம்

டைட்டில் வைத்தே படத்தின் கதையை சொல்லி விடலாம்.தங்கர்பச்சான் படம் எடுத்தாலே ஒரு வித சோகம் தான்.அதனால் தான் இதைபோன்ற படங்களே பார்ப்பது இல்லை.இப்பவும் நான் இந்த படத்தினை பார்க்கவில்லை.சாந்தனு சக்கரையை தின்னுகிட்டே டாக்ஸி ஒட்டி கிட்டு போய் அம்மாவின் கைபேசியில் புகுந்துவிட்டார்.

அவர் எப்படி எல்லாம் நடித்து உள்ளார் என்று எனக்கு தெரியாது என்னா நான் படம் பாக்கலை எங்களுக்கு பாக்கவும் தெரியாது.அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம் நான் ஒன்னும் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதளைன்கோ.அப்புறம் எதுகுங்கோ,

எல்லாரும் அம்மாவின் கைபேசி விமர்சனம்னு எழுதிபுட்டு எல்லாரும் தங்கர்பச்சானின் அம்மாவின் கைபேசி படத்தை பற்றி எழுதுராங்கோ.நானும் ஒவ்வொரு பதிவிற்கும் போய் ஏமார்ந்து விட்டு தான் வரேன் அதான் நானாவது எங்க அம்மாவின் கைபேசியை பற்றி எழுதலாம்னு வந்து இருக்கேன்.

நான் எவ்வளவு சொல்லியும் android phone வாங்கி தாரேன்னு சொன்னாலும் எனக்கு எதுக்குப்பா இதையே பயன்படுத்துவது இல்லை.எதுக்குப்பா ஆண் பெண்டு எனக்கு இது போதும்பா(NOKIA 1100) இல்லை நோக்கியாவிலேயே வேறு ஏதாவது வாங்கி தாரேன்னு சொன்னாலும் கேட்க்க மாட்டேங்கிறாங்க...
சரி விஷயத்துக்கு வருவோம்

2G network தான் மொபைல் GSM மட்டும் தான் சப்போர்ட்.மெமரி பொறுத்த வரை cardslot இல்லை phonebook 50ம் கால் ரெகார்ட் பொறுத்த வரை 10 dialed, 10 received, 10 missed call save ஆகும்.

gprs,radio எதுவும் இல்லை முக்கியமா 3g இல்லை பாட்டரி li-on 850mah அவ்வளவு தாங்க.பரவாயில்லை ANDROIDவிட நல்லாவே தாக்கு பிடிக்குது.இதை தான் அடிகடி ஹாலிவுட் ரசிகன் சொல்லிகிட்டே இருக்கார்.இதுக்கு மேல சொல்லுறதுக்கு அதில் ஒரு எழவும் இல்லை எப்படியாவது எங்க மம்மியை androidக்கு மாத்தணும்னு பாக்குறேன் ஹிஹும் ஒன்னும் வேளைக்கு ஆக வில்லை.

தங்கர்பச்சான் மம்மியின் செல்போன் நினைத்து கொண்டு வந்தவர்களுக்கு ஏமாற்றம்மே மின்சியது என விமர்சன குழு தெரிவித்து கொள்கிறது.

எனக்கு தெரியும் ஹாரி பய இல்லன்னா பிளாக்கர் நண்பன் சொல்லுவாங்க உங்க தலைப்பை பார்த்தும் இப்படி ஏதாவது மொக்கையை எழுதுவீங்கன்னு அதை போலவே எழுதி இருக்கீங்கன்னு சொல்லுவாங்க....இப்ப நான் சொன்னதால் கூட சொல்லாமல் போகலாம்.....

21 comments:

  1. என்னங்க..இப்படி பொசுக்குன்னு 1100 பற்றி இப்படி சொல்லிட்டிங்க? உலகம் அழிந்தாலும் அழியாத ஒரே ஃபோன் அது தான் தெரியுமா?

    சுருக்கமா -

    ReplyDelete
    Replies
    1. எதுவும்மே தெரியலையே

      Delete
  2. உலகத்தில் 1100 தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டதில் No.1

    ReplyDelete
    Replies
    1. ஒ அப்படியொண்ணு இருக்கா....

      Delete
  3. அட என்னோட அம்மாவோட கைபேசி கூட தான்.

    விமர்சனம் கலக்கல். படம் பார்க்கும் உணர்வை தூண்டுகிறது. (அதாவது என்ன சொல்றாப்லனா நான் பதிவ படிச்சு பல்ப வாங்கலனு. ஓகே )

    ReplyDelete
    Replies
    1. எதுக்குயா பல்ப் வாங்குற பியூஸ் போச்சா வீட்டுல...

      Delete
  4. நடுநிலையான விமர்சனம். விமர்சனத்தை படிக்கும் போதே படத்தைப் பார்க்க தூண்டுகிறது. (ஹாரியை காப்பி அடிக்கலை, நானா யோசிச்சது)

    ReplyDelete
    Replies
    1. அதிலும் திறமையான விமர்சன பதிவர்களுக்கு போட்டியாக வருகின்ற (அதுவும் டப் கம்பிடிசன்) அளவுக்கு சொல்லாடல்கள் இருக்கிறது கவனித்தீர்களா?

      Delete
    2. பிந்தைய கம்மெண்டை பார்க்கவும்...

      Delete
    3. @அப்துல் அண்ணாத்த
      அதான் பதிவிலேயே படம் போட்டு வச்சி இருக்கேன் பாத்துகிட்டே இருங்க
      @ஹாரி பூரி கக்குஸ் லாரி
      நான் கவனிக்கலையே எந்த இடத்தில்

      Delete
  5. மம்மியின் செல்போன்(அம்மாவின் கைபேசி) - அரைகுறை SPECIFICATION

    தலைப்பிலேயே படத்தின் விமர்சனத்தை பின்நவீனத்துவம் முறையில் வெளிப்படுத்தியது அருமையோ அருமை...!

    ReplyDelete
    Replies
    1. //10 dialed, 10 received, 10 missed call save//

      குறிப்பிட்ட சில விமர்சகர்களுக்கு மட்டுமே கை வந்த குறியீடுகள் மூலம் விளங்க படுத்தும் ராச தந்திரம் இவருக்கும் வாய்த்து இருக்கிறது பார்த்தீர்களா.. (ஏன் இது இது தங்கர்பச்சானுக்கு கூட தெரியாதாம்)

      Delete
    2. @அப்துல் அண்ணாத்த
      பின்நவீனத்துவம் அப்படிஎன்றால் என்ன சத்தியமாய் தெரியாதுங்கோ....
      @ஹாரி பூரி
      ஒரு விமர்சனம் என்றால் அனைத்தையும் கூறி தான் ஆகணும்.எங்களுக்கு துப்பாக்கியில் விஜய் காஜல் நடித்து தெரியாதா அப்புறம் ஏன் உங்க விமர்சனத்தில் மற்றவர்கள் விஜய் நடிகர் அப்படின்னு சொல்லுறீங்க(இது முருகதாசுச்கே தெரியாதாம் ஏன் கூகிள்க்கே தெரியாதாம்)

      Delete
    3. அட மெய்யாலுமாவா

      Delete
    4. பொய்யாலும் மச்சி android போன் வாங்கிட்டு apple os இருக்குன்னு சொல்லுறீங்க

      Delete
  6. என்னம்மோ எதிர்ப்பார்த்து வந்தேங்க..ரொம்ப நல்லாருக்கு விமர்...சாரிங்க பதிவு..நன்றி.

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா ஏன்யா உனக்கு இந்தக் கொலைவெறி

    ReplyDelete
  8. எல்லாருக்கும் விடமால் ஒட்டு போடும் சின்னாவிற்கு ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete