Monday, October 17, 2016

இன்பெர்னோ தேவி றெக்க விமர்சனம்.INFERNO DEVI REKKA MOVIE REVIEW

படம் வந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது எழதுவதற்கு ரொம்ப சோம்பேறி தனம் அதான் எழுத முடியவில்லை.நேற்று தான் இன்பெர்னோ(inferno) பார்த்தேன் அதான் மற்ற இரண்டையும் சேர்த்து எழுதி விடுவோம் என்று.ஆ முன்னுரை தேர்த்தியாசு.இப்ப படத்துக்கு போவோம்.
இன்பெர்னோ(INFERNO)


இன்பெர்னோ INFERNO விமர்சனம் REVIEW


எல்லாருக்கும் தெரியும் டா வின்சி கோட்(DA VINCI CODE) மற்றும் ஏஞ்ஜெல்ஸ் அண்ட் டிமன்(ANGELS AND DEMON) நாவல் எழுதிய டான் பிரவுன்(DAN BROWN) நான்காவது நாவல் தான் இந்த இன்பெர்னோ.டா வின்சி கோட் மற்றும் ஏஞ்ஜெல்ஸ் அண்ட் டிமன் வரும் அதே கதாபாத்திரமான ராபர்ட் லாங்க்டன் தான் ஹீரோ.ராபர்ட் லாங்க்டனாக டாம் ஹாங்க்ஸ்(TOM HANKS) தொடர்கிறார்.ரோன் ஹோவர்ட்(RON HOWARD) இயக்குனராகவும் தொடர்கிறார்.

முதல் இரண்டு பாகம் போல இன்பெர்னோ அவ்வளவு விறுவிறுப்பு இல்லை.மனித  இனத்தால் உலகமமே அழியும் நிலை.எதிர்காலத்தில் மனிதர்களே வாழ இயலாமல் போகும் நிலை.அதானால் இன்பெர்னோ என்னும் வைரஸ் பரப்பி மனித இனத்தில் பாதியை காலி செய்ய நினைக்கும் வில்லன்.அதற்க்கான ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டு செத்து போய்விடுகிறார்.அந்த வைரஸ் எங்க உள்ளது என்பதற்கு தடயத்தையும் விட்டு விட்டு செல்கிறார்.நம்ம ஹீரோ எப்படி அதை தடுத்தார் என்பதே கதை.

படம் அவ்வளவு மோசம் ஒன்னும் இல்லை.அவ்வளவு வொர்தும்இல்லை.வழக்கமான ஒரு ஹாலிவுட் படம் உலகை காக்கும் ஹீரோ இதில் வேற என்ன எதிர்பார்க்க முடியும்.விறு விறுப்பாக எல்லாம் செல்லவில்லை.ஏதோ ரெண்டு புதிர் அவ்வளவு தான் படம் நாவல் இருக்கிற மாதிரி தான் எடுதாங்கலான்னு தெரியலை.

தேவி(DEVI)


தேவி DEVIL DEVI விமர்சனம்
பிரபுதேவா ரொம்ப வருடங்களுக்கு பிறகு கம் பேக் படம்.அதற்கேற்றார் போல படமும் நன்றாகவே உள்ளது.சும்மா பாடல்களில் மட்டும் சீன் காட்டி விட்டு செல்லும் தமனா இதில் இவரை வைத்தே தான் படம் செல்கிறது.தமன்னா நடிப்பும் நன்றாக உள்ளது.

பிரபுதேவா டான்ஸ் அது அப்படியே தான் உள்ளது.சல்மார் பாடல் டான்ஸ் பட்ட்யகிளப்பி இருக்கார்.தமன்னா டான்ஸ் பிரபுதேவா ஈக்குவல்லா இருந்துச்சி.அதான் உடம்பு சரி இல்லாமல் போற அளவிற்கு பென்ட் எடுத்துவிட்டார் பிரபுதேவா.

பிரபுதேவா நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரோட சில பழைய ரீயாக்சன் மிஸ் செய்கிறோம்.அவருக்கும் வயதாகி விட்டது அல்லவா.RJ பாலாஜி காமெடி சிறப்பாக சிரிக்க வைக்கிறார்.குடும்பத்தோடு போய் ஜாலி பார்த்துவிட்டு வரக்கூடிய பேய் படம்.

றெக்க(REKKA)


றெக்க விமர்சனம்  REKKA
இது ஒரு பக்கா தெலுகு படம்.இப்ப கூட யாரவது தெலுகில் டப் செய்தோ அல்லது அல்லு அர்ஜுன் வைத்தோ எடுத்தாலோ படம் செம்ம ஹிட் கன்பார்ம்.

எல்லோரின் காதலையும் சேர்த்து வைக்கும் ஹீரோ.வில்லன் கல்யாணம் செய்துக்கபோற பொண்னை தூக்கி விடுகிறார்.அதற்க்கு பழிவாங்க விஜய் சேதுபதி தங்கச்சி கல்யாணம் நடக்கும் போது அதை வைத்து பிளாக்மயில்  செய்யும் வில்லன்.தனக்காக ஒரு காரியம் செய்ய சொல்கிறார்.வில்லனுக்கு ஒரு வில்லன் அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை ஹீரோ தூக்கணும்.அவங்க தான் லட்சுமி மேனன்.லட்சுமி மேனன் மதுரை மிக பெரிய டான் பொண்ணு.

அப்புறம் என்ன மிருதன் ஜெயம் ரவி அடிச்சதை விட எல்லாரையும் பல பேர அடிகிறாரு கார் கிழிக்கிராறு.இதுல இவர் இப்படி செய்வதற்கு ஒரு பிளாஷ் பேக் வேற.அது இதை விட கொடுமை.

எவ்வளவோ நல்ல கமர்சியல் படம் எடுக்க ஆட்கள் இருக்காங்க விஜய் சேதுபதி.மறுபடியும் இப்படி எல்லாம் படத்தில் நடிக்காதிங்க ப்ளீஸ்.நல்லவேளை பஞ்ச் டயலாக் பேசலை.ஒரு மாதிரியே எல்லா படத்திலும்  டயலாக் டெலிவரி இருக்குற மாதிரி தோணுது.

3 comments:

  1. தேவி மட்டும்தான் பார்த்தேன் சகோ..இன்னும் ரெண்டு படம் இருக்குது..
    மூன்று படத்தையும் சார்ட் என் ஸ்வீட்-டா எழுதி இருக்கிங்க..சிறப்பு.
    நீங்கள் சொல்வதை பார்த்தால் ரெக்கதான் மோசம் போலயே..

    ReplyDelete
    Replies
    1. இல்ல பாஸ் ரெமோவுக்கு றெக்க தேவலாம்.இன்பெர்னோ சரி இல்லை.

      Delete
  2. அப்ப நெக்ஸ் ரெக்க-தான் பார்க்க போறேன் சகோ.

    ReplyDelete