Inspector Zende.
Surprise. Surprise. Surprise. சும்மா மனோஜ் பாஜ்பாய் இருக்காரேன்னு பார்க்க ஆரம்பிச்சா படம் பட்டாசா இருக்கு.
கொடூரமான சார்லஸ் சோப்ராஜை உண்மையிலயே ரெண்டுவாட்டி பிடிச்ச மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் Zendeவோட உண்மையான கதைய, அப்படியே சினிமாவுக்கு ஏத்தமாதிரி மாத்தி, கலர்ஃபுல்லா, fun packedஆ தந்திருக்காங்க.
சில காட்சிகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சி ரசிச்சேன். அதுவும் அந்த தேன்கூட்டை கலைக்கிறேன்னு சொல்லி மிரட்டுற சீன்லா அல்டிமேட்.
மனோஜோட பாடி லாங்வேஜ் எல்லாம் வழக்கம்போல அதகளம். அதுபோக கூட நடிச்சிருக்கிற எல்லா போலீஸ் கேரக்டர்சும் சும்மா கிழி. இவ்ளோ சீரியசான கதைய எவ்ளோ ஜாலியா முடியுமோ அவ்ளோ ஜாலியா சொல்லி இருக்காங்க. இயக்குனர் சின்மய்க்கு காமெடி எடுக்க அற்புதமா வருது. சரியான ரியாக்சன்ஸை செமயா வாங்கியிருக்காரு.
நெட்ப்ளிக்ஸ்ல இருக்கு. மறக்காம பாருங்க. மஜாவா இருக்கு.
Credit:- பாலகணேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக