சக்தி திருமகன்
ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஆரம்பத்துல இருந்து கடைசிவரை engage வச்சிருந்த படம் பார்த்து.கிளைமேக்ஸ் மட்டும் இந்த ஊழல்களுக்கு எதிரான எல்லா படத்திலும் வர மாதிரி தான் இதுலயும் வச்சிருக்காங்க.
எப்படி பெரியார் அவாளுக்கு எதிரா சண்டை பண்ணாரோ,அதே மாதிரி ஹிரோ பெரியாரிசத்தால வளர்க்கப்பட்டவர்.பெரியவனாகி அதே அவாள் கூட்டத்துக்கு எதிரா சண்டை பண்றாரு.
சாதாரண ஆளான விஜய் ஆண்டனி 6000 கோடி அடிச்சிட்டு அதை வச்சு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காரு.இதை கண்டுபிடிச்ச அவாளோட ஹெட் விஜய் ஆண்டனி திட்டத்தையும் எங்க பணம் இருக்கனும் தெரிஞ்சிக்க பாக்குறாரு.இதுல அவாள் ஜெயிச்சாலா இல்ல ஹிரோ ஜெயிச்சாரா அவர் ஏன் இத பண்ணணும் தான் கதை.
சின்ன வயசுல இருந்து இந்த அதிகாரம் ஏழைகளுக்கு ஒரு மாதிரியும் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் நடந்துக்கிறத பார்த்து.இங்க நல்லவனா இருந்தா எதுவும் நடக்காது பணம் இருந்தா மட்டுந்தான் எதுவும் செய்ய முடியும்னு,தப்பு பண்ண ஆரம்பிக்குறான்
இப்ப நடக்குற அரசியல் பேசி (எப்பவுமே இங்க ஒரே அரசியல் தான் யாரா இருந்தாலும்) இருக்காங்க.பெட்ரோல் எத்தனால் கலப்பு பற்றி எல்லாம் ஒரு சீன் வருது.
இந்த படத்துக்கு முதலில் வச்ச தலைப்பு பராசக்தியாம்.
#சக்திதிருமகன் #விஜய் #sakthithirumagan #vijay #VijayAntony
கருத்துகள்
கருத்துரையிடுக