Weapons Review வெப்பன்ஸ் விமர்சனம்


 Weapons


அப்டின்னு ஒரு அமானுஷ்யம் நெறஞ்ச அனுபவத்த நமக்கு கொடுக்கற படம். இந்தப் படத்தோட போஸ்ட்டர முதல் முதலா நண்பர்கள், ஃபேஸ்புக்ல படம் பாத்ததா பகிர்ந்தப்ப இருந்தே எனக்கு இதை பாத்துடனும்னு ஒரு நச்சரிப்பு மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. அந்தப் போஸ்ட்டர் கூட இது எதோ சிறுவர் இலக்கியம்னு தான் நம்மள நினைக்க வைக்கும். ஆனா எனக்கு மட்டும் என்னமோ வித்தியாசமா பட்டது. உண்மையில இது சிறுவர்கள் யாரும் பாக்கவே கூடாத ஒரு படம்னுதான் எனக்குத் தோணுது.அப்டி என்ன இந்தப் படத்துல இருக்குன்னு பாத்துடுவோம் வாங்க.


கதைப்படி முதல்ல வர்ற ஒரு சிறுவனோட நேரேசன்லயே கதைக்குள்ள நம்மளப் புடிச்சுத் தள்ளி விட்டுடறாங்க. ஒரு ஊர்ல, ஒரு எலிமெண்டரி ஸ்கூல். அதுல ஒரு கிளாஸ்ல மட்டும் அன்னிக்கி மொத்தம் 18ல 17 ஸ்டூடண்ட்ஸ் ஆப்சண்ட். ஒருத்தன் மட்டும்தான் வந்துருக்கான். என்னடா எலிமெண்டரி லெவல்லயே மாஸ் கட்டான்னு அந்த ஸ்டூடண்ட்ஸ்களோட வீடுகள்ல விசாரிச்சா, அவங்க எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி, அந்த நாள் விடியக் காலைல 2.17க்கு வீட்டை விட்டு, கைய றெக்க மாதிரி விரிச்சி வச்சுகிட்டு ஓடிப் போனவங்கதான், அதுக்கப்புறம் திரும்ப வரவே இல்லன்னு தெரிய வருது. இந்த டீட்டெய்லிங் கூட சில ஸ்டூடண்ட்ஸோட வீடுகள்ல இருந்த சிசிடிவியப் பாத்து கன்ஃபார்ம் பண்ணதுதான். 


சரி அப்டி எங்கதான் போனாங்கன்னு தேடலாம். ஆனா எங்கன்னு தான் தெரியாதே. ஒரு கிளாஸ்ல பதினேழு பேர் மிஸ்ஸிங்ன்னா அடுத்து, அந்த கிளாஸ் டீச்சருக்குத்தான் இதனால அனத்தம் புடிக்கும். அப்டித்தான் அந்த கிளாஸ் டீச்சர் ஜஸ்ட்டின் காண்டிய எல்லா பேரன்ட்ஸும் சூனியக்காரின்னே திட்ட ஆரம்பிச்சிடறாங்க. எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் அவங்களோட கோவத்தக் காட்டறதுக்காக, ஜஸ்ட்டினோட கார்ல சூனியக்காரின்னு பெய்ண்ட்ல எழுதியே வச்சிடறாங்க. ஆனா ஜஸ்ட்டினுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கான்னு, படம் பாக்கற நமக்கே ஒரு சந்தேகம் வருதுல்ல. அப்டி நாம நெனச்சிகிட்டிருக்கும் போதே அவளுக்குத் தூங்கறப்ப சில ஜம்ப் ஸ்கேர் அனுபவங்களெல்லாம் வருது. உண்மையில இந்தப் படத்துல உள்ள ஒரே ஜம்ப் ஸ்கேர் சீனும் இதுதான்.


அடுத்து கதை நகர்ற விதம். ஆரம்பக்காட்சிகள்ல வந்த ஸ்கூல் பிரச்சினைய நமக்குத் தெளிவா ரொம்ப விளக்காம, காட்கள் வழியாவே நமக்கு, அந்தப் பிரச்சினைகளப் புரிய வச்சு, அடுத்தடுத்து அந்தக் காட்சிகளுக்குச் சம்பந்தப்பட்ட சிலரோட, கடந்த சில நாட்கள இந்தப் பிரச்சினை வரைக்குமான நாள் வரையிலயும் காட்டறது, செமயான திரைக்கதை உத்தி. அப்டி மொதல்ல நமக்குக் காட்டப்படறது, கிளாஸ் டீச்சர் ஜஸ்ட்டினோட எபிசோட். இந்த எபிசோட் முழுசா முடியிறப்ப நாம கதையில ஒரு முடிவுக்கு வந்திருப்போம். ஓ இப்டித்தான் இது நடக்குதான்னு. உண்மையில நாம ரொம்ப யோசிக்கறதுக்குள்ளயே, டீச்சரோட எபிசோட் முடிஞ்சு, அவங்க எபிசோட்ல இருந்தே ஒரு கேரக்ட்டரோட கடந்த சில நாட்களா அடுத்த எபிசோட காட்டுவாங்க. அப்ப நாம இன்னமும், ஓ இதனாலதான் இப்டி ஆச்சான்னு இன்னொரு முடிவுக்கு வந்துருப்போம்.


எத்தன எபிசோட்ஸ் நமக்குக் காட்டப்பட்டாலும், படத்தோட மெயின் பிரச்சினையான, அந்தப் பதினேழு ஸ்டூடண்ட்ஸ் எங்க போனாங்க, என்ன ஆனாங்கன்னு நமக்குத் தோராயமா ஒரு க்ளூ கூட கிடைக்காத படி பர்ப்பஸா அதை மட்டும் நமக்கு சஸ்பென்ஸாவே வச்சிருப்பாங்க.


அதையெல்லாம் தாண்டி, நமக்கு, ’இல்லல்ல. எனக்கு என்னமோ இந்த எடத்து மேலதான் டவுட்டு’ன்னு ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும். அதையும் பர்ப்பஸாவேதான் பண்ணிருக்காங்க. ரொம்ப சஸ்பென்ஸ் தான். ஆனா, அதை ரீவில் பண்றப்ப நம்மள அந்தப் புது விசயத்துக்கு பழக்கிருக்கனும்னு ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க.


அதுவும், ஒரு புது விசயம். அதை பேயா, பிசாசா, மாந்திரீகமா, தந்திரமான்னு கிளாஸெல்லாம் எடுக்காம, அப்டி நடந்தா, இப்டி ஆகும்லன்னு ஆடியன்ஸ அதுக்குப் பழக்கப்படுத்தி, காட்சிகள் வழியா, ஒரு புதுவிதமான உலகத்தையே படச்சிருக்காங்கன்னுதான் சொல்லனும். 


எல்லாத்துக்கும் மேல இந்தப் படத்துல கூட எனக்கு ஆரம்பத்துல, சில எடிட்டிங் பிரச்சினை இருந்த மாதிரி சுருக்குன்னு பட்டது. என்னடா எடிட்டிங் பத்தியெல்லாம் பேசறளவுக்கு வளந்துட்டியாடா நீன்னு கேட்டா – யெஸ். நான் எடிட்டர்தான் இப்ப. என்னால அதுல உள்ள பிரச்சினைகளப் பத்திப் பேச முடியும். சரி விசயத்துக்கு வருவோம். ஆரம்பத்துல வந்த சில காட்சிகள்ல, ஜஸ்ட்டின் காண்டி கார்ல ஏறி உக்காந்து கதவ சாத்திருப்பாங்க. அடுத்த கட்ல எறங்கறதுக்காகக் கதவைத் தெறப்பாங்க. சரி அவங்க போகல போலன்னு நெனச்சா, அவங்க எறங்கினது வேற எடம். என்னடா எடிட்டிங் இது? கார்ல ஒருத்தர் ஏறிக் கெளம்பறாங்கன்னா, கார் நகர்ந்திருக்க வேணாமா? அட்லீஸ்ட் ஸ்டார்ட் பண்ற சவுண்டாச்சும் வச்சிருக்கனும்லன்னு நெனச்சிட்டிருக்கும் போதே ரெண்டு மூனுவாட்டி இதே மாதிரி காட்டறாங்க. காரணம் என்னன்னு கடைசில வர்ற சில காட்சிகளோட எடிட்டுக்கு நம்மள இப்ப இருந்தே பழக்கப்படுத்தறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். மத்தபடி படத்துல அடுத்தடுத்த எபிசோட்ல கார் சேஸிங் சீனெல்லாம் இருக்கு. ஆனா இதை பர்செப்சன் அல்லது பாய்ண்ட் ஆஃப் வ்யூ கட்ஸ்க்கு நம்மள எப்டியாவது பழக்கப்படுறதுக்கு டீச்சர யூஸ் பண்ணிக்கிட்டாங்க. இது அவங்க மேல தப்பில்ல. ஏன்னா அவங்களோடதுதான் முதல் எபிசோட். 


அடுத்து படத்துல உள்ள முக்கியமான ரெண்டு பேர், பெனடிக்ட் வாங்கும், தானோஸும். ச்சும்மா லொலலாய்க்கிச் சொன்னேன். அந்த கேரக்ட்டரா நடிச்ச மார்க்கஸ் மில்லரும், ஜாஸ் ப்ராலினும் நடிச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தேன். ஆனா எனக்குப் புடிச்சது ஜஸ்ட்டின் காண்டி டீச்சர்தான். இனி அவங்க நடிச்ச படங்களத் தேடிப் புடிச்சுப் பாக்கனும். ரொம்ப சீன்ஸ் இல்லன்னாலும், கிடைச்ச சில காட்சிகள்லயும் நல்லா ரியாக்சன்ஸ் காட்டிருக்காங்க. சரி நடிகர்கள விடுங்க. 


Credit:- Karthikeyan 

கருத்துகள்