Monday, July 9, 2012

ஆப்பிள் ஐஒஎஸ்6 ஆன்ட்ராய் ஜெல்லி பீன் தோற்க்கஅடிக்குமா...


ஆப்பிள் சும்மா ரெக்கை கட்டி பறகுதும்மா அண்ணாமலை சைக்கிள் என்பது போல சும்மா மொபைல் உலகத்தில் திரிந்தான்..என்னைக்கு ANDROID என்னும் எமன் வந்ததோ அவனுக்கு சனியன் புடித்து விட்டது.ஆப்பிள் விற்பனை முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அப்போதும் பலர் ஆப்பிள் விரும்பி கொண்டு தான் உள்ளனர்...

ஆன்ட்ராய்ட் பல ஸ்மார்ட்போன் தங்களின் OS செயல்படுவதால் பெரிய அளவில் வந்துவிட்டது.ஆனால் ஆப்பிள் தன்னுடைய மொபைல் தவிர வேறு எதிலும் பயன்படுத்தவில்லை...இப்ப கூகிள் தன்னுடைய ஆன்ட்ராய்(JELLY BEAN 4.1) பதிப்பில் புதிய இயங்குதளம் அறிமுகம் செய்துள்ள நிலையில் ஆப்பிள் புதிய OS(IOS 6) தன்னுயடைய ஐபோன்5ல் வெளியிட உள்ளது.இது என்னவோ கூகிள்க்கு போட்டியாய் விடுவது போலவே உள்ளது.
 MAPS:-
 இது கூகிளுக்கு எதிராகவே ஆப்பிள் சொந்தமாய் மாப்ஸ் ஆரம்பித்து
உள்ளான். இது கூகிள்க்கு ஆரம்பத்தில் ஒரு ஆப்பாய் இருந்தாலும் OFFLINE MAP விட்டு பின்னிடான். யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும். அதை கேள்வி பட்டதில் இருந்து ஆப்பிள் மாப்ஸ் வசதியை ரொம்ப மேம்படுத்தி உள்ளார்களாம். FLYOVER ன்னு ஆகாயத்தில் இருந்து தொங்கிகிட்டு பார்க்கும் வசதி, ஒவ்வொரு TURNING POINTகும் TURNING NAVIGATION CURSOR வசதியோடு 3D வசதி உண்டு. 3Dயில் பார்க்க ரொம்பவே சூப்பர் இருக்கு. TRAFFIC நிலைமையை உடனுக்குடன்
அறிவிக்கும், நாம போகும் நேரத்தை குறைக்க டிராபிக் இருந்து வேறு எந்தபாதையில் செல்ல என்பதையும் UPDATE செய்யும் வசதி. விபத்து, வேலை (சீரமைப்பு பணி) நடைபெற்றால் அதன் விவரத்தையும் அளிக்கும்
GOOGLE MAP VS APPLE MAPS
.

SIRI:-
கூகிள் இப்ப ஜெல்லி பீனில் இந்த வசதியை கொண்டு வந்து விட்டனர் (ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்த வசதி உள்ளது). IOS6ல் இருந்து SIRI VOICE
அதிகபடியான மொழிகள்,மற்றும் நாடுகளில் செயல்படும் படி உருவாக்கபட்டு
உள்ளது. இதில் உள்ள சில வசதிகள்,

SPORT - நமக்கு பிடித்த விளையாடினை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதில் பெறலாம். அந்த டீம் உள்ள PLAYER NAME, SCORE ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.

MOVIES - நமக்கு எந்த படத்தை பற்றி விவரம் தேவையோ அதை பற்றி தேடாமலேயே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.அந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ், ட்ரைலர், ROTTEN TOMATOES RATING AND REVIEW தெரிந்துக் கொள்ளலாம்.

RESTAURANTS - நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள RESTAURANTS LOCATION, எத்தனை வகையான சாப்பாட்டு உள்ளது, விலை, அந்த சாப்பாட்டு IMAGE வரை காட்டும். அப்படியே அங்க ஒரு TABLE கூட புக் செய்து கொள்ளலாம்.

FACEBOOK :- 

IOS6ல் FACEBOOK AND TWITTER APPLICATION ஒரு சில வசதியோடு தருகின்றனர். நம்ம மொபைல் உள்ள போட்டோ அல்லது கேமராவில் பிடித்த போட்டோவை அப்படியே FACEBOOK AND TWITTERல் SHARE செய்து கொள்ளலாம் SIRI VOICE மூலம் நம்முடைய STATUS UPDATE செய்து கொள்ளலாம்.

PHOTO STREAM:-
நம்ம மொபைல் உள்ள போட்டோவை இணையத்தில் பகிரும் வசதி. அப்படியே போட்டோவை ICLOUDல் SHARE செய்து கொண்டு ஆப்பிள் டிவியில்
போட்டோ STREAMஆக காணலாம். மற்றவர்கள் அந்த இமேஜ்ல் கமெண்ட் மற்றும் லைக் செய்யலாம்.

PASSBOOK:-
AIR TICKET, GIFT CARD, MOVIE TICKET என பெற்று கொள்ளும் வசதி இதில் உள்ளது. (அதுக்கு இதில் பணம் இருக்கனும்).

FACETIME:-
வீடியோ காலிங் வசதி தற்போது 3G மூலமாகவும் பயன்படுத்தலாம்.

PHONE CALLING:-

முக்கியமான வேலையில் இருக்கும் பொது ஏதாவது கால் வந்தால்
அதை கட் செய்யாமல் தடுக்கும் வசதி உள்ளது. கால் வரும்போதே அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப, REMINDER செட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க DO NOT DISTURB வசதி (போன்க்கு மட்டும் தான்).

SAFARI:-

ICLOUD TAB என ஒரு வசதி தந்து உள்ளனர் அதில் நாம் செல்லும் இணைய
பக்கத்தினை TRACK செய்து கொள்ளும் பின்னர் OFFLINEல் அந்த பக்கத்தினை
படித்து கொள்ளலாம்.

இந்த பதிவை பிளாக்கர் நண்பன் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதவும் என் தளத்தில் வெளியிட அனுமதி தந்தமைக்கு நன்றி...

6 comments:

  1. // யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும்.// பங்காளிகளுக்குள சண்டைனா பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு கொண்டாட்டம் தான சின்னா.

    //இந்த பதிவை பிளாக்கர் நண்பன் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதவும் என் தளத்தில் வெளியிட அனுமதி தந்தமைக்கு நன்றி...//
    டகங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு உள்ளே சண்டை போட்டால் தானே நமக்கு ஏதாவது நல்லதாய் கிடைக்கும்...நம்ம புகழ் வளராமல் இருப்பது தான் நல்லது...

      Delete
  2. புது புது வசதிகளுடன் அழகாக உள்ளது IOS 6 ..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆப்பிள் அழகாய் தான் உள்ளது இருந்தாலும் ஆண்ட்ராய்ட் சமாளிக்கும்மா என்று தெரியவில்லை

      Delete
  3. Replies
    1. ரொம்ப நன்றி தனபாலன் சார்...

      Delete