![]() | |
IMAGE GOOGLE.COM |
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இரண்டு முறை நடித்து வரும் முதல் படம்.ஒரே படத்தை இரண்டு முறை நடிக்கிறது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.பாலா மாமா எடுத்ததை பார்த்துட்டு விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் கழுவி உற்றி பதறி போய் இரண்டாவது முறை எடுத்து நொறுக்கி இருக்காங்க...
அர்ஜுன் ரெட்டிதெலுகு படத்தின்தமிழ் வடிவம் தான் இந்த ஆதித்ய வர்மா.முதலில் பாலா அவர்கள் வர்மா என முழு படத்தையும் எடுத்து அது சமுக வலைதளங்களில் விமர்சிக்கக்பட்டத்தின் விளைவாக இரண்டாவதாக கிரிசாயா வைத்து எடுத்து உள்ளனர்.பாலா மாமாவ காலி பண்ணதுல நமக்கும் பங்கு இருக்கு.
அர்ஜுன் ரெட்டி பார்த்தவங்களுக்கு இது பெருசா எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது.ஏன்னா இது ஒரு அட்டை டு அட்டை காப்பி.ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சாக்லேட் பாயா துருவ் கிடைத்து இருக்காரு.படம் மொத்தமும் துருவ் தான் செம்மையா நடித்து இருக்காரு.ஏதோ முதல் படம் மாதிரியே இல்லை.பின்ன ஒரே படத்தை ரெண்டு முறை நடித்து இர்க்கார்ல்ல.
இசை ரதன் நம்ம சென்னை பையன் தான் இவரே தான் அர்ஜுன் ரெட்டிக்கும் மியூசிக்.செம்மையா போட்டு இருக்காரு.புள்ளிங்கோ டைப் ஆட்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும்.வித்தியாசமான படம் எதிர் பார்பவர்கள் தயவுசெய்து போயிடாதிங்க.அப்புறம் உங்க விருப்பம்.
FROZEN 2
![]() |
IMGE CREDITS: INSTAGRAM/FROZENMOVIE |
Frozen முதல் பாகத்தில் தனக்கு கிடைத்த சக்தியால் யாருக்கும் ஆபத்து வந்து விட கூடாது என நினைக்கும் எல்சா தன்னுடைய முடிசூட்டும் விழாவில் சக்தியை கட்டுபடுத்த முடியாமல் நாட்டு மக்கள் தங்கை அன்னா(ANNA) என அனைவருக்கும் பிரச்சனையாய் அமைய விபத்தாக தன் நாட்டையே பனியில் உறைய வைத்துவிட்டு காட்டிற்குள் சென்று விடும் எல்சாவை ஒலாப்,கிறிஸ்டோப்,எல்சா உதவியோடு மீட்டு நாட்டை பழையபடி மாற்றி அரியணையில் அமர வைப்பது தான் முதல் பாகம்.
FROZEN 2வில் மகிழ்ச்சியாக இருக்கும் ஏரண்டல் நகரம் இயற்கையால் பாதிக்கப்பட எல்சாவிற்கு மட்டும் கேட்கும் குரல் அதை தொடர்ந்து சென்றால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எல்சா மற்றும் அன்னா,நண்பர்கள் அனைவரும் மேற்கொள்ளும் சாகசம் தான் இரண்டம் பாகம்.
இதில் எப்படி எல்சாவிற்கு இந்த சக்தி கிடைத்தது,எல்சாவின் அம்மா அப்பா எப்படி எதற்க்காக இறந்தனர்.அவர்கள் எதை தேடி சென்றனர்.போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல பட்டுள்ளது.
தமிழ் டப்பிங் நன்றாகவே உள்ளது.எல்சாவிற்க்கு சுருதி ஹாசனும்,ANNAவிற்க்கு விஜய் டிவி DD குரல் கொடுத்து உள்ளனர்.பனி மனிதனாக வரும் ஒலாப்க்கு காமெடி நடிகர் சத்யன் குரல் கொடுத்து உள்ளார்.ஒலாப் குரல் அருமையாக உள்ளது.ஒலாப் பேசும்போது குழந்தைகள் அனைவரும் சிரித்து கொண்டே இருதனர்.
No comments:
Post a Comment