மதராஸி
இது முருகதாஸ்க்கு நல்ல கம் பேக் தான்.கத்தி, துப்பாக்கி கம்பேர் பண்ணக் கூடாது.இப்ப சமீபமா எடுத்த சல்லு பாய் படத்தோட கம்பேர் பண்ணும்போது இது ஒரு சிறந்த கம்பேக் மூவி.
காதல் தோல்வியால் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்ணி சாக முடியாத சிவா.6 கண்டெய்னர் துப்பாக்கியோட தமிழ்நாட்டுக்குள்ள அமெரிக்கா நார்த் இந்தியா மாதிரி துப்பாக்கி கலாச்சாரத்தை உண்டாக்க வரும் வில்லன் தடுக்க நினைக்கும் போலீஸ் டீம்.
அந்த 5 கண்டெய்னர் ஒரு கேஸ் ப்ளான்ட் வில்லன் வச்சி இருக்கான்.சிவா அனுப்பி அந்த கேஸ் ப்ளான்ட் அழிக்க பாக்குறாங்க.முதல் பாதி லவ் ட்ராக்,சிவாவோட பிரச்சினை எல்லாம் சொல்லி மெதுவா போகுது.
இரண்டாம் பாதி கொஞ்சம் வேகமா போகுது.அனிருத் இந்த முறை காதை பதம் பார்க்கமல் டீசன்ட் போட்டு இருக்கான்.ஆனா ஒரு மெலடி பாட்டுல மட்டும் வச்சி செஞ்சுட்டான்.சலார் சாகோ ட்ராக் ஞாபகம் வந்துக்கிட்டே இருந்துச்சு.
சிவாவோட நடிப்பு நல்லாவே இருந்துச்சு.தன்னோட குடும்பத்தோட போன் பேசுற மாதிரி நடிக்கிற சீன்,தன்னோட கையில குழந்தை தராத சீன் எல்லாம் சிவா ஆக்டிங் நல்லா இருந்துச்சு.
தாராளமா பாக்கலாம்.
#sk #Madharaasi #மதராஸி #ARMurugadoss #anirudh
கருத்துகள்
கருத்துரையிடுக