Sunday, June 10, 2012

சினிகான்...தலயோட புது வில்லன் ...

தலயோட புது வில்லன்...

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பெயர் இடாத படத்தில் நடித்து வரும் தல அஜித் இந்த படத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர்(மஞ்சள் ரேக்கர் வைத்து இருந்து இருப்பார் போல) வில்லன்.தல பில்லா 2 பின் ஆர்யா அஜித் இருவரும் சேர்த்து நடிக்கும் படம் இது இதில் பாடிகார்ட்,ஸ்லம்டாக் மில்லினர் போன்ற
படத்தில் முக்கிய(முக்குறது எல்லாம் ஒரு வேடம்மா) வேடத்தில் நடித்து உள்ளார்.இவர் வாஸ்தவ்,விருத்,மற்றும் அஸ்திவா போன்ற ஹிந்தி படத்திலும் இயக்கி உள்ளார்...

டர்ட்டி பிச்சர் பார்த்திபன்...

ஹிந்தியில் வெளியாகி படும் ஹிட் ஆன DIRTY PICTURE கன்னட ரீமேக்கில் நஸ்ருதீன் ஷா வேடத்தில் பார்த்திபன் நடிப்பதாய் உள்ளது.இதில் சில்க் வேடத்தில் வீனா மாலிக்(வீனா போச்சு) நடிக்கிறார்.மறைந்த தென்இந்திய நடிகை சில்க் வாழ்கையை மையமாய் வைத்து எடுக்கபட்ட படம் இதில் வித்யா பாலன் நடித்து அவருக்கு தேசிய விருது கிடைத்தது.இதை கன்னடம்,தெலுகு,தமிழ்(தமிழ் சிக்கிரம் எடுங்க எதிர்பார்ப்பில் இருக்கோம் மவனே அனுஷ்கா தவிர வேற யாரையாவது போட்ட அவ்வளவு தான்) எடுக்க முயற்சி நடந்து கொண்டுள்ளது...

பாலிவுட் பிருதிவிராஜ்:-

தற்போது பிருதிவிராஜ் ஹிந்தியில் ராணி முகர்ஜியோடு ஐயா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.அதற்குள் பாலிவுட்டில் இன்னொரு பட வாய்ப்பு வந்து உள்ளது.தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா இயக்கும் அவ்ரங்கசிப் படத்தில் நடிக்க இருக்கிறார்.இதில் முக்கியமான வேடத்தில் அர்ஜுன் கபூர் நடிக்கிறார்......

அபியும் நானும் படத்தில் அமீர்கான்...

தமிழ் ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஸ்ராஜ் மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்து ஹிட் ஆன படத்தை ஹிந்தியில் பிரகாஷ்ராஜ் இயக்க இருக்கிறார் அதில் பிரகாஷ்ராஜ் வேசத்தில் அமீர் நடிக்க இருக்கிறார்.சமிபத்தில் இந்த படத்தை பார்த்த அமீர்கானுக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம் நடிக்கவும் சம்மதம் தெரிவித்து விட்டாராம் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிரார்....

அக்கா வேஷமா ஓடி போயிடு......

தமிழ் வேட்டை படத்தை ஹிந்தி ரீமேக் ஆக இருக்குது இதையும் லிங்கம் தான் இயக்குகிறார்..ஆர்யா ரோலில் ஷாகித் கபூர் நடிக்கிறார் மற்ற ரோலிற்கு ஆட்கள் தேர்வு செய்து கொண்டு உள்ளனர்...நம்ம லிங்கு அசின்கிட்ட போய் கத்துகிட்ட கேட்டு இருக்கார் சமீரா வேசத்தில் நடிக்க தயாரா என்று கடுப்பு ஆகி லிங்குசாமியை துரத்தி விட்டாராம்...நிறைய ஹீரோயின் (ரெண்டு பேரு அதிகமா) அக்கா வேடத்தில் எல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லிடாராம்...அது மட்டும் இல்லாமல் கால்ஷீட்(கால் செருப்பு தானே இருக்கனும் எதுக்கு ஷீட்) வேற இல்லையாம்...

2 comments:

  1. பில்லா 2 வர போகுது, முதல் ஷோ பார்க்க முயற்சி பண்றேன் பாக்கலாம் என்ன நடக்க போகுதுன்னு

    ReplyDelete
    Replies
    1. பாக்கணும் சீனு கண்டிப்பா பாருங்க நான் லேட்டா தான் பார்ப்பேன்...

      Delete